உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்த வேண்டாமா? அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்தால் என்ன? நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்து – பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற்கேற்றாற் போல் மாற்றி ஓடச் செய்கின்றோமா? – இல்லையா? அது போல மனித எந்திரத்தையும் பெருந்திண்டி மூலம் ஓடச் செய்யாமல் மின்சாரம் போன்ற சக்தியைக் கண்டுபிடித்து (சிறிய உணவை) அதைக் கொண்டே மனிதனை இயங்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்தால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
