நான்காம் தர அரசியல் செய்யலாமா ஆளுநர்? சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கண்டனம்

2 Min Read

அரசியல்

கோவை, மே 6- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்திற்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்கிறார் என சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு விமர்சித்துள்ளார். மேலும் தமிழ் நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல் வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழ் நாடு சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக் காமல் கிடப்பில் போட்டு இருப் பதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

ஆளுநர் விவகாரம் தொடர் பாக தமிழ்நாடு சட்டப் பேரவை யில் தீர்மானமும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனிடையே, ஆங் கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘திராவிட மாடல்’ காலாவதியான கொள்கை என்று விமர்சித்து இருந்தது தமிழ்நாடு அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் கருத்துக்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் 

மு.அப்பாவு, ஆளுநர் ஆர்.என் ரவி நான்காம் தர அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார். இது தொடர் பாக கோவையில் சட்டமன்றத் தலைவர்மு.அப்பாவு கூறிய தாவது:-

மாநில ஆளுநர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி பணி யாற்ற வேண்டியவர்கள். இந்தியா வில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது.

மதச்சார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதச்சார்புள்ள நாடு தான் என்று திணிப்பது போன்று ஆளுநர்கள் பேசுவது தவறானது. அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழ் நாடு ஆளுநர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகி விட்டது என்பது போல சொல் வதும் சரியானது இல்லை.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய நட வடிக்கையை துரிதமாக தமிழ்நாடு அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், குடியரசுத் தலைவரை சந்தித்து தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை ஆளுநர் செய்து வரு கிறார். 

இந்தியாவில் மக்களாட்சி தத் துவம்தான் சிறந்தது. மக்களாட்சி தான் நடைபெற்று வருகிறது. நாட்டில் ஓபிசிக்கு கொடுக்கக் கூடிய மருத்துவப் படிப்பில், இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். தமிழ் நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள் ளது” இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *