30.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மாநில உரிமைகளை மதிக்காமல் இருப்பது, ரயில் திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில தேர்தல்,பாஜக தலைமை கவலை.
* பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் கூட்டத்தில், மகாகத்பந்தன் சட்டமன்ற உறுப் பினர்கள் தேஜஸ்வியை அவைத் தலைவராக தேர்வு செய்தனர்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு 22.78% இலிருந்து 21.39% ஆக குறைந்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்வதற்கு முன்பு அநீதியைத் தடுக்க உயர் மட்ட மதிப்பாய்வை நாட அறிவுறுத்தல்.
தி டெலிகிராப்:
* பல மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தம் தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கோரும் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் இறப்புகளை தேர்தல் குழு கையாள்வதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அர்ச்சகர் அளிக்கும் திருமணச் சான்றிதழ் செல்லாது: மும்பை சிவில் நீதிமன்றம் தீர்ப்பு. தகுதிவாய்ந்த மாநில அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் எப்போதும் அர்ச்சகர் வழங்கிய கடிதத்தை விட செல்லுபடியாகும் என இறந்த மசகான் பன்வாலாவின் முதல் மனைவி மற்றும் சட்டப்பூர்வ வாரிசு என்று கூறி ஒரு பெண் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி தீர்ப்பு.
– குடந்தை கருணா
