தஞ்சை, நவ. 30– பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளரான இரா.இரத்தினகிரி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத் தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த 28.11.2025 மதியம் 12 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், தஞ்சாவூர் கீழஅலங்க இல்லத்தில் கடந்த 24.11.2025 அன்று மறைவுற்ற இரா.இரத்தினகிரி அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். அவர் கழகப் பணிகளளை பற்றி அவரது குடும்பத்தினரிடம் நினைவு கூர்ந்தார்.
முன்னதாக அவரது வாழ்விணை யர் நாடியம்மை, மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கும் அவரது மகன் என்.ஆர்.கார்க்கி, மருமகள் பேராசிரியை முனைவர் சத்தியாதேவி, பேரப்பிள்ளைகள் சிபி, சுகி மற்றும் மைத்துனர் கலைகுமார் ஆகியோர் ஆசிரியர் அவர்களை வர வேற்றனர்.
இந்நிகழ்வில் மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட மகளிரணித் தலைவர் கலைச்செல்வி, நகரச் செயலாளர் இரா.வீரக்குமார் மற்றும் இரத்தினகிரி யின் உற்ற நண்பர்களும் பெரியார் பெருந்தொண்டர்களுமான மருதவாணன், குப்பு.வீரமணி, சிஎன்டி தியாகராஜன் ஆகியோரும் மாணவர் கழகச் செயலாளர் செந்தூர்பாண்டியன், பழக்கடை கணேசன், கரந்தை டேவிட், ஜோதிமாஸ், நெல்லுப்பட்டு ராமலிங்கம் அழகு ராமகிருஷ்ணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கலைத் துறைச் செயலாளர் சித்தார்த்தன், வீதிநாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பெரியார் நேசன், குமரவேல் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
