நாகர்கோவில், நவ. 30– கன்னியா குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கலைவாணர் பிறந்த நாளான 29.11.2025 அன்று நாகர் கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் எஸ் அலெக்சாண்டர், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் ம.செல்வராசு பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்
