டிட்வா புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் முகாம்கள் தயார்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை, நவ.30 டிட்வா புயல் மற்றும் பருவ மழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மய் யங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால்,  டிட்வா புயல் தாக்கத்தால் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நேற்று (29.11.2025) சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மய்யத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நீர்த்தேக்கங்களில் உபரிநீர் இருப்பினை முன்கூட்டியே திறத்தல் மற்றும் முறையான நீர் மேலாண்மையின் மூலம் நகரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படா மல் பாதுகாக்குமாறும் பாதிப் புக்குள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண் காணிக்குமாறும் தேவைக் கேற்ப பொது மக்களை முன் கூட்டியே நிவாரண முகாம் களில் தங்க வைக்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாது காப்பு மய்யங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அலுவலர்கள் ஒருங்கிணைக்கப் பட்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களுடனும் தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி நெல்லையிலும், ஒரு அணி விழுப்புரம் மாவட்டத்திலும், ஒரு அணி சென்னையிலும் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 5 அணி அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *