மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, நவ.30 மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நேற்று (29.11.2025) காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

‘திராவிட மாடல்’ அரசின் வளர்ச்சியை….

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: திராவிட மாடல் அரசின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் ஒன்றிய பாஜக அரசு, நிதி ஆணையத்தின் வாயிலாக நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் மற்றும் அந்த ஆணையம் அளித்துள்ள அதிகார பகிர்வுகளை அளிக்க மறுப்பது, மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்களின் நிதிச்சுமையை இதுவரை இல்லாத அளவிற்கு மாநில அரசின் தலையில் சுமத்துவது, ஒன்றிய அரசு மட்டுமே செஸ் வசூலித்து மாநிலத்திற்கு அறவே அளிக்க மறுப்பது, ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்காமல் நிராகரித்து, மாநிலத்தின் வரிகளை மட்டும் வசூலித்துக் கொள்வது, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியினை மாநிலத்தில் நடத்துவதற்கு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போடுவது, பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்குவது,

அதிகார முறைகேடுகள்

சிபிஅய்-அமலாக்கத்துறை- வருமானவரித்துறை என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார முறைகேடு செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுநர்களை நியமித்து, பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் சீர்கேட்டில் ஈடுபடுவது எனக் கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளைத் தனது அன்றாட “அரசு நடவடிக்கைகளாக” ஆக்கிக் கொண்டுள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரைத் திட்டங்களும் தராமல் மறுத்து, அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, “ஒன்றிய – மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில் -!உறவில்” ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.

புதிய ரயில் திட்டங்களும் இல்லை

பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை” என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. “ரயில்வே திட்டங்களில் புதிய வழித்தடத்திற்கு 2024-2025இல் 31 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆனால் தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி ரூபாய் மட்டும்” என்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையால் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள். புதிய திட்டங்களையும் அறிவிக்க மறுக்கிறார்கள். ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு…

* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும். மேலும், இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் வருவதற்கு அதிமுக துளியளவும் துணை நிற்கவில்லை என்றாலும், “கைக்குட்டையும் கையுமாகச் சென்று” பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துவிட்டு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்குத் துணை போக வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

விமான நிலைய
விரிவாக்கத் திட்டத்திற்கு

* மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, கோவை – மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கும்-மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கும் விரைந்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவிற்குக் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யும் சட்டப் போராட்டத்தில் ஓயமாட்டோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சபதத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள்.

* செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று நிறைவேற்றிட வேண்டும்.

விவசாயிகள் ஏமாந்து நிற்கிறார்கள்

* விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 17 விழுக்காடு ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து, 22 விழுக்காடு வரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். ஈரப்பத அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகள் இன்று ஏமாந்து நிற்கிறார்கள். 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய இரு கொள்முதல் பருவங்களிலும் ஈரப்பதத்தை அதிகரித்துக் கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக ஈரப்பதத்தின் அளவை அதிகரித்து அனுமதியளிக்க வேண்டும்.

பா.ஜ.க.வின் காவிக் கொள்கையை

* 2024-2025 மற்றும் 2025-2026ஆம் ஆண்டுகளுக்கான ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு “சமக்ர சிக்ஷா” திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 3548.22 கோடி ரூபாயை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசினை வழிநடத்தும் ஒரு அரசியல் கட்சி தனது கட்சியின் மதவாத கல்விக் கொள்கையை, சமூகநீதிக்குப் புறம்பான கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்களின் மீது திணிக்க கூட்டாட்சி நெறிமுறைகளுக்கு மாறாக, ஒன்றிய – மாநில நிர்வாக உறவு மற்றும் நடைமுறைகளுக்கு மாறாக நிதியை நிறுத்தி வைப்பது என்பது இதற்கு முன்பு ஒன்றியத்தில் ஆட்சி செய்த எந்தக் கட்சியும் செய்யாத அவலம் நிறைந்த – சீர்கேடான நடவடிக்கையாகும். “பா.ஜ.க.வின் காவிக் கொள்கையை ஏற்காவிடில் ஒன்றிய அரசின் நிதி இல்லை” என்பது ஆட்சிக்கும் – கட்சிக்கும் வேறுபாடு தெரியாமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்தும் பேயாட்டம் என்பதை இக்கூட்டம் பதிவு செய்து, ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு மக்கள் விரோதச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, தமிழ்நாட்டிற்கு உடனடியாக சமக்ர சிக்ஷா நிதியை விடுவித்திட வேண்டும்.

* ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது.

மீனவர்களின் உரிமைகள்

* இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம். இலங்கை அரசின் சமீபத்திய அதீத கொள்கை என்பது, தமிழ்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். கடுமையான அபராதம் விதிப்பதையும், கைது செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதையும் தடுக்க ஒன்றிய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *