பொன்னேரி, மே. 6- பொன்னேரி பகுதி கழகத் தோழர் செல்வ ராஜ் தாயார் பொன்னம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு 30/4/2023 மாலை 7 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்றது .
மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமையில் , புழல் ஒன்றிய மேனாள் செய லாளர் ஜனாதிபதி, மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை தலை வர் கு.செல்வி ஆகியோர் தந்தை பெரியாரின் கருத்துகளை சிறப்பாக எடுத்துரைத்தனர். செல்வராஜ் நன்றி கூறினார்.
நிகழ்வில் பொன்னேரி நகர தலைவர் வே.அருள், ஒன்றிய செயலாளர் கெ.முருகன், தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார். மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர் மா.இளையராணி , வடகரை ஜெகத் விஜயகுமார் பெரியார் பிஞ்சுகள் நவிலன் வெண்பா, மற்றும் தமிழ்ச்செம்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் செல்வராஜ் அவர்களின் குடும்பத்தினர் ஏராளமானவர்கள் பங்கேற்று பெரியாரின் கருத்துகளை கேட்டனர்.