பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: சூப்பர்வைசர் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 30, சிவில் 30, எச்.ஆர்., 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப் பெண்ணுடன் எச்.ஆர்., பணிக்கு பி.பி.ஏ., / பி.பி.எஸ்., / பி.எஸ்.டபிள்யு, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.9.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 795. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295.
கடைசி நாள்: 25.11.2023
விவரங்களுக்கு: careers.bhel.in