எஸ்.எஸ்.எல்.சி. (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள் இந்தத் தேதிக்குள் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் கட்டாயம் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கு நீதி!
உச்ச நீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள நீதிபதி சூர்ய காந்த், ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதே தமது முதன்மையான பணி என்று அறிவித்துள்ளார்.
