ராமன் கோவிலில் காவிக் கொடி ஏற்றி பிரதமர் பேச்சு:
‘‘2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், ராமன் காட்டிய பாதையில் நாம் நடக்க வேண்டும். நம் பாடத்திட்டத்தை வகுத்த ஆங்கிலேய அதிகாரி மெக்காலேயின், 200 ஆண்டு கால அடிமை மனநிலையை அடுத்த, 10 ஆண்டுகளில் நாம் முறியடிக்க வேண்டும்’’ எனப் பேசினார். முன்னதாக 6-ஆவது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போதும் இதையே தான் பேசினார்.
‘மெக்காலே மனப்பாங்கு’
குறித்த பிரதமரின் கூற்று
பிரதமர் “மெக்காலே மனப்பாங்கு” என்பது ஆங்கிலம் இந்தியர்களின் கலாச்சாரம்–அடையாளத்தை சேதப்படுத்தியது என்ற வாதத்தை முன்வைக்கிறார். ஆனால் இது வரலாற்றை தவறாகப் பயன்படுத்தும் அரசியல் பேச்சு.
கல்வி, வேலைவாய்ப்பு, தகவல் தொழில் நுட்பம் (அய்.டி.), அறிவியல், வணிகம், நீதித்துறை ஆகியவற்றில் ஆங்கிலம் இந்தியாவின் உலகளாவிய முன்னேற்றத்தின் அடித்தளம். அதை “காலனித்துவ மனநிலை” என்று அழைப்பது நடைமுறைக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாது.
உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை மாற்றும் முயற்சியா?
நாட்டின் பெரிய சிக்கல்கள்:
- வேலை இல்லாமை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்
- விலை உயர்வு
- விவசாய நெருக்கடி
- தொழில், உற்பத்தி துறை மந்தம்
இந்நிலையில் இப்பண்பாட்டு பேச்சுகள் முன்வருவது உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் அரசியல் யுத்தம் என்ற விமர்சனம் சரியே.
ஆங்கிலத்தை குறை சொல்கிறவர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் ஆங்கிலப் பள்ளிகளில் அனுப்புவது.
பலரும், மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர் களின் பிள்ளைகள், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில், உயர் கட்டண ஆங்கில நடுநிலைப் பள்ளி களில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.
அவர்கள் படிப்பது தவறு இல்லை; இன்று சாமானியர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஆங்கிலம் கற்று உலகெங்கும் போக முயற்சிப்பது, சங் பரிவார்களுக்கு வலிக்கிறது.
‘சூத்திரர்’கள், ‘பஞ்சமர்’கள் இவ்வாறு கல்வி மயமாக்கப்பட்டால், இதுவரை அவர்கள் பார்த்து வந்த மிகவும் மலினமாக பார்க்கப்படும் வேலைகளை யார் பார்ப்பார்கள் என்ற மனநிலைதானே!
வரலாற்று உண்மைக்கு முரணானது
இதனால், “ஆங்கிலம் தீமையானது” என்ற அரசியல் பேச்சு இரட்டை நிலைப்பாடு ஆகும்.
பிரிவினையின் கொடூர நினைவு நாள் (‘Partition Horrors Day’): பிரிட்டிஷாரின் பங்கை மறைத்து, காங்கிரசை குறை சொல்வது
அரசின் கூற்று — “பிரிவினைக்கு, காங்கிரஸ் மற்றும் காந்தி காரணம்”— என்பது வரலாற்று உண்மைக்கு முரண்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ் ‘பிரித்து ஆள்’ கொள்கை, தனி தேர்தல் முறை, அரசியல் பிரிவினை, 1909–1946 சட்ட மாற்றங்கள் இவை அனைத்தும் பிரிவினைக்கு அடித்தளமாக இருந்தன. இதற்குப் பிறகும் காந்தியை குறை சொல்வது காலனித்துவ வரலாறை திரித்து பயன்படுத்தும் முயற்சி.
சங் பரிவாரத்தின்
விடுதலைப் போராட்ட பின்னணி
வரலாறு காட்டுவது: ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார அமைப்புகள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க வில்லை; சாவர்க்கரின் பல மன்னிப்பு மனுக்கள் சாட்சிகள் ஆகும்.
இப்படி இருந்த அமைப்புகளிலிருந்து வரும் தலைவர்கள் இன்று “காலனித்துவ மனப்பாங்கு” பற்றி பேசுவது நம்பகத்தன்மையற்றது என்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.
“மெக்காலே இந்தியக் கல்வியை அழித்தார்” என்ற கூற்றின் உண்மை நிலை என்ன?
இது வரலாற்று திரிபுவாதம் ஆகும். உண்மை நிலை என்னவென்றால்,
- பிரிட்டிஷாருக்கு முன் கல்வி அனைவருக்கும் கிடைக்க வில்லை.
- சூத்திரர், பஞ்சமர், பெண்கள் அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டது.
- நாட்டளவிலான பொது கல்வி அமைப்பு இல்லை.
ஆனால் “மெக்காலே ஒரு முழுமையான கல்வி அமைப்பை அழித்தார்” என்பது சங் பரிவாரின் தொடர் புளுகுவாதம்..
ஹிந்தியால் இந்திய மொழிகள்
பல அழிந்தன
இந்திய மொழிகளை அழித்தது ஆங்கிலமா?—இல்லை, ஹிந்தி ஆதிக்கமே பெரும் பிரச்சினை.
இங்கே முக்கிய உண்மை ஒன்று:
- ஆங்கிலம் அல்ல, ஹிந்தி ஆதிக்கக் கொள்கையே பல இந்திய மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்துள்ளது.
- போஜ்புரி, அவதி, பிரஜ், மார்வாடி போன்ற மொழிகள் ஹிந்தியின் ஒருமைப்படுத்தலில் புழக்கத்தில் இருந்தே அகற்றப்பட்டன.
ஆனால் அதற்காக ஆங்கிலத்தை குறை சொல்வது திசைதிருப்பலாகும்.
மொழி நிதியில் ஒன்றிய அரசின் தெளிவான பாகுபாடு – சமஸ்கிருத்திற்கு மட்டுமே ஆதரவு.
ஒன்றிய அரசின் மொழி ஆதரவு கொள்கை மேலும் கேள்வி எழுப்புகிறது:
- சமஸ்கிருதத்துக்கு தொடர்ந்து அதிக நிதி, புதிய திட்டங்கள், சிறப்பு நிறுவனங்கள்!
- ஆனால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா போன்ற அங்கீகாரம் பெற்ற செம்மொழிகளுக்கு கூட நிதி குறைவு!
- போஜ்புரி, மராத்தி, அரியானவி, துடிக் மொழிகள் போன்ற நாட்டுப்புற மொழிகளுக்கு ஆதரவு மிகக் குறைவு
இது வெளிப்படையான மொழிப் பாகுபாடு, அரசியல் பாசாங்கு (hypocrisy).
மோடியின் பேச்சுக்குக் காரணம்
அதே அரசு “மெக்காலே மனப்பாங்கு” என்று ஆங்கிலத்தை குறை சொல்வது வரலாற்றியல் ரீதியிலும், கொள்கை ரீதியிலும் முரண்பாடே.
அயோத்தி கோவில் விழாவில் பிரதமர் மோடி பேசுவதற்கு காரணம்:
இது சிக்னல்:
- பண்பாட்டு–அடையாள அரசியலை முன்னிலைப் படுத்துவது.
- வரலாற்றைத் திரித்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது.
- பொருளாதாரத் தோல்விகளிலிருந்து பேசு பொருளை விலக்குவது.
