இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கைகளில் இரத்தம் இருப்பதாகக் கூறி நாங்கள் கூட்டத்தைத் தொடங்கினோம்: மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு (SIR) எதிராக மாநிலத்தில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தது.
தி ஹிந்து:
* அரசு நடத்தும் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கமான துணைவேந்தர்கள் நியமனம் குறித்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிக்கையை முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பி, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் “கவனிக்கவில்லை” என்று கேரள அரசு 28.11.2025 அன்று சமர்ப்பித்த அறிக்கையை ஒரு ‘சாதாரண காகிதத் துண்டு’ என்று கருத முடியாது என உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தல்.
தி டெலிகிராப்:
* வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்வது வாக்காளர்களை சரி பார்க்கவா அல்லது வங்காளிகளின் அடையாளத்தின் மீது சந்தேகம் எழுப்பவா என்ற கேள்விக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது என்று தேர்தல் குழுவுடனான சந்திப்புக்குப் பிறகு திரிணாமுல் குழுவினர் கருத்து.
– குடந்தை கருணா
