இன்று (7.5.2023) காலை 10.15 மணியளவில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் அமைத்து, மூன்றாம் ஆண்டில் வெற்றி வாகையுடன் அடியெடுத்து வைக்கும் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினோம்.
எல்லையற்ற மகிழ்ச்சியுடன், ‘‘ஆளுமையின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட அரசியல் அறைகூவல்கள் தேவை – அதை நம் இன எதிரிகள் தக்க சமயத்தில் வழங்கி, தங்கள் ஆட்சியை பீடுநடை பெருமிதத்துடன் நடக்க உதவுகிறார்கள்.
வரலாறு படைக்க, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் ஒளி திக்கெட்டும் பரவ தாய்க்கழகத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று கூறி, வாழ்த்தினோம்!
கி.வீரமணி
சென்னை தலைவர்,
7.5.2023 திராவிடர் கழகம்