‘‘சொல்லிலும், செயலிலும்
தமிழர்களின் நண்பராக விளங்கியவர்’’
சென்னை, நவ. 28– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடும், தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். என் மீது அன்பு காட்டியவர். பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்.
தமிழ்நாட்டுக்கும், அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதேநாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங்கின் முழுவுருவச் சிலை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர், நீட் என விதவிதமான வழிகளில் சமூகநீதியை குழி தோண்டிப் புதைக் கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே ‘மிஸ்’ செய்கி றோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
