டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாநிலத்தில் நிலவும் அதிகாரப் போட்டி விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரை டில்லிக்கு அழைத்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும், துணை முதலமைச்சர் மல்லு பட்டி வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “வாக்குத் திருடன் ( சோரி)”, தவறான வாக்காளர் பட்டியல்கள், வாக்காளர் தகவல் சேர்க்கும் அதிகாரிகள் இறப்புகள், அருணாச்சலப் பிரதேசம் மீதான சீனாவின் கூற்று குறித்த கேள்விகளை ராகுல் எழுப்புவதை இழிவுபடுத்துவதன் மூலம் பாஜக நாட்டை தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடகாவில் அதிகார மோதலுக்கு மத்தியில், டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் சித்தராமைய்யா ஆதரவாளர் பரமேஸ்வரா கருத்து.
தி இந்து:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் ஆதரவு; பதவிக்காலத்தை குறைப்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
* அரசியலமைப்பைக் காப்பாற்ற நடத்தப்படும் பேரணியை மோடி அரசு ரத்து செய்வது ஒரு ஹிந்து ராஷ்டிராவை உருவாக்குவதற்கான சதி என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உதித் ராஜ் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* குடியுரிமையை வாக்குச்சாவடி நிலை அதிகாரி (பிஎல்ஓ) தீர்மானிப்பதா? வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையம் வரம்பு மீறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்.
– குடந்தை கருணா
