பிரதமர் மோடி ஏற்றிய கொடியின் அடையாளம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரதமர் நவம்பர் 26 அன்று நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தின் மேன்மையை உறுதிப்படுத்திய அதே நாளில், மாலை ராமன்கோவில் சென்று மிகப் பெரிய காவிக் கொடியை மிகுந்த பக்தியுடன் ஏற்றிய நிகழ்வு, இந்தியாவின் மதச்சார்பின்மை  கொள்கை மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த ஆழமான எதிர்க் கேள்விகளை எழுப்புகிறது.

‘அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாகக் கருதப்படுகிறது. அரசின் தலைவர்கள் அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டாடி, அதன்படி நடப்பேன்’ என்று உறுதிகூறுவது, சடங்குகளை விடச் சட்டம் தான் உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது.

அதே தலைவர், அரசு விழாக்களிலும் பொது மேடைகளிலும் குறிப்பிட்ட மதத்தை  உயர்த்திப் பேசுவது, ஒரு மதத்தின் கொடியை உயர்த்துவது, அரசின் கொள்கைக்கும், தனிப்பட்ட நம்பிக்கைக்கும் இடையிலான கோட்டை அழிக்கிறது. ‘ராமராஜ்யம்’ என்பது வெறும் ஆன்மிக முழக்கமல்ல; அரசமைப் புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கைகளுக்கு நேரெதிரான ஒரு குறிப்பிட்ட சமூக-மதச் சடங்கின் ஆட்சியை நிறுவுவதற்கான ஓர் அரசியல் இலக்கு ஆகும்.

அயோத்தி ராமன் கோவில் கொடியேற்றம் மற்றும் பிரமாண்ட தீபோத்சவ் நிகழ்வுகளில், அயோத்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவுதேஷ் பிரசாத் (தாழ்த்தப்பட்டசமூகத்தைச் சேர்ந்தவர்) தொடர்ந்து புறக் கணிக்கப்படுவது, ‘ராமராஜ்யம்’ யாருக்காகக் கட்டமைக்கப் படுகிறது என்பதைத் தெளிவு படுத்துகிறது.

ஒரு தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தொடர்ந்து புறக்கணிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளுக்கு மத மற்றும் ஜாதிய படிநிலைகளில் செயல் படும் வெறுப்புக் குழுக்கள்  அளிக்கும் மரியாதையின்மையைக் காட்டுகிறது.

‘விசுவ இந்து பரிசத்’, ‘பஜ்ரங் தள்’ போன்ற குழுக்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அயோத்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, உள்ளூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்காதது, இது ஒரு ‘தேசிய ஒற்றுமை விழா’ அல்ல, மாறாக ஒரு ‘ஜாதிய மத அடையாளத்தின் பிரகடன விழா ’என்பதை உறுதிப்படுத்துகிறது.

அவுதேஷ் பிரசாத் குறிப்பிட்டது போல், கோவில் கட்டுமானப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் இருந்து உயர் ஜாதியினர் வரவழைக்கப்படுவது மற்றும் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படாதது ஆகியவை ‘ராமராஜ்யம்’ என்னும் முழக்கம் என்பது ‘சமத்துவ மின்மையின் மறுஅரங்கேற்றம்’ என்பதைக் காட்டுகிறது.

உள்ளூர் மக்கள் (குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்) கோவில் கட்டுமானப் பணிகளில் இருந்து விலக்கப்படுவது, பொருளாதார வாய்ப்புகளை மறுப்பதுடன், சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து அவர்களை மேலும் ஒதுக்குகிறது.

கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கும், உள்ளே நுழைவதற்கும் தாழ்த்தப்பட்டோர் மறுக்கப்படுகிறார்கள். இதுதான் அவர்கள் கூறும் ‘ராமராஜ்யம்’ என்பதை புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘ராமராஜ்யம்’ என்பது குறிப்பிட்ட ஜாதிகளுக்கு மட்டுமேயான ஒரு ‘புனித’ ஆட்சிப் பிரதேசம் என்பதை நிரூபிக்கிறது.

‘திருவிழா தொடர்பான காணொலிகள், ஒளிப்படங்கள் மாநில அரசின் அனுமதியின்றி வெளியே வரக்கூடாது’ என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது, தகவல் வெளிப்படைத்தன்மை  மீதான அரசின் கட்டுப்பாட்டையும், உண்மை நிலையை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தாதிருக்க அரசு மேற்கொள்ளும் முயற் சியையும் காட்டுகிறது. இது விமர்சனங்களுக்கு இடமளிக்காத ஒரு மத-அரசியல் பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாகும்.

“ராமராஜ்யம்” என்ற சித்தாந்தம் அதன் மய்யத்தில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான சமத்துவம் (Equality), சகோதரத்துவம் (Fraternity), மற்றும் மதச்சார்பின்மை (Secularism) ஆகியவற்றுக்கு எதிரான எதிர்மறையான ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு போபால் தொகுதியில் வெற்றி பெற்ற சாமியாரிணி பிரக்யா சிங் ‘‘விரைவில் மிகப் பெரிய இடத்தில் காவிக்கொடி ஏறும்’’ என்றார்.

இதற்காகவே அவர் மீதான வழக்குகளில் அவர் விடுவிக் கப்பட்டது சட்டத்தின் ஆட்சி குறித்த கேள்வியை எழுப்பியது! அதன் தொடர்ச்சியாக தற்போது அயோத்தியில் நடக்கும் நிகழ்வுகள், சட்டத்தின் ஆட்சியைக் காட்டிலும் சடங்கின் ஆட்சி யையும், ஜனநாயகத்தைக் காட்டிலும் ஜாதிய ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தும் ஒரு பேராபத்தாக உருவெடுத் துள்ளது.

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதும், ஜாதியப் பாகுபாடுகள் மீண்டும் வெளிப்படையாக அரங்கேற்றப்படுவதும், இந்த சித்தாந்தம் அரசமைப்புச் சட்டத்தின் மீதும், சமூக சமத்துவத்தின் மீதும் செலுத்தும் ஆபத்தான தாக்குதலை அப்பட்டமாகக் காட்டுகிறது.

தொடர்ந்து மூன்று முறை ஒன்றிய ஆட்சி இவர்களின் கையிலிருப்பதால் ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளைத் திணிப்பதில் தீவிர மூர்க்கம் காட்டுகிறார்கள்.

அயோத்தியில் மோடி ஏற்றியது அவர்களின் சித்தாந்தமான இந்து ராஷ்டிரத்துக்கான (‘ராமராஜ்யம்’ என்றாலும் அதுதானே!) கொடியேற்றமேயாகும்! எச்சரிக்கை!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *