குடந்தை, மே 7 – தஞ்சாவூர் வல்லத்தில் சிறப்புடன் இயங்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பெரியார் பிஞ்சுகளுக்கான பழகு முகாம் நடைபெற்றது.
இதில் 2023 மே மாதம் முதல் தேதி தொடங்கி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் குழந் தைகளுக்கு பெரியாரியல் பற்றிய வகுப்பு எடுத்தார்.
இந்தப் பழகு முகாமில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கும்பகோணம் (மல்டி ஸ்பெஷாலிட்டி)அன்பு மருத்துவமனையின் சார்பாக, அதன் நிர்வாக இயக்குநர்-வழக்குரைஞர் கரிகாலன் உண்மை, மேலாளர் பிரசன்னா, கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை க.அன்பழகன், மற்றும் அவர்கள் சகோதரர் அன்பு மருத்துவமனை இயக்குநர் ஆனந்தம் கணபதி சாக்கோட்டை, ஆகி யோர்,முகாமில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் தஞ்சை மண்டல கழகத்தின் செயலாளர் குடந்தை க.குருசாமி அவர்கள் மூலமாக தோல் பை வழங்கி மருத்துவமனையின் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள்.
பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும், திராவிடர் கழகத்தின் சார்பாகவும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.