நியூயார்க், மே 7 கரோனா தொற்று பாதிப்பு குறித்த சுகாதார அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு (டபிள் யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா என்ற கொடிய நோய்த் தொற்று கண்டறி யப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக் கணக்கான மக்கள் உயிரி ழந்தனர்.
கரோனாவை கட்டுப் படுத்த இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. உலக சுகாதார அமைப்பு கரோ னாவை பன்னாட்டு அவசர நிலையாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் அவ சர குழு கூட்டம் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட் ரோஸ் அதனோம் தலை மையில் கூடியது.
கூட்டத்துக்குப் பின்னர் டெட்ரோஸ் அத னோம் செய்தியாளர்களி டம் கூறியதாவது: கோவிட் -19 பாதிப்பால் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தாலும், அச்சுறுத் தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவுடன் போரா டிக் கொண்டிருக்கின்றனர். கரோனா தொற்றுக்குப் பிந் தைய பாதிப்பால் லட்சக் கணக்கான மக்கள் சிரமங் களைச் சந்தித்து வருகின் றனர்.
கரோனா தொற்று இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து மக்களை கொல்கிறது. அது ஒரு சவா லாகவே உள்ளது. அதே நேரம் கரோனா குறித்து இனியும் மக்கள் கவலைப் பட தேவையில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வு டன் செயல்பட்டு வந்துள் ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கரோனா பாதிப்பு தொடர்பான சுகாதார அவசரநிலை இனி ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.