சென்னை, நவ.27- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று (26.11.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்சை பின்பற்றியவர்கள் இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை அழித்துவிட்டனர் என்று பேசியுள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை யையும், பல மொழிகள் பேசும் மக்களின் கலாச்சாரத்தையும் அழிக்க முயலும் ஆர்.என்.ரவி இத்தகைய குற்றச்சாட்டை காரல் மார்க்ஸ் மீது வைத்துள்ளது கடும் கண்டனத்திற் குரியது’ என்று கூறியுள்ளார்.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
