சென்னை, நவ.27- அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தையொட்டி ‘வரையறுக்கப் பட்டுள்ள கூட்டாட்சியை நிலை நிறுத்தி; மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (26.11.2025) பதிவிட்டிருப்பதாவது:
‘‘இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல, அதன் மக்கள் அனைவருக்குமானது. பாபாசாகேப் அம்பேத்கரின் இந்த பரந்த பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மனவுறுதியை இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில் மீண்டும் உறுதிகூறுகிறோம்.
கூட்டாட்சியியலை நிலைநிறுத்தவும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே அரசியலமைப்பு சட்டத்துக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
