தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த நான்காயிரம் பேருக்கு மனநல ஆலோசனை அதிகாரி தகவல்

சென்னை, நவ. 27- தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 4 ஆயிரம் பேருக்கு “நட்புடன் உங்களோடு” சேவை மூலம் மனநல ஆலோசனை வழங்கி காப்பாற்றியதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

இலவச உதவி எண்

அன்பானவர்களை இழப்பது, மணமுறிவு, வேலை இழப்பு போன்ற கடுமையான வாழ்க்கை சம்பவங்கள் ஒருவரின் மனநிலையை கடுமையாக பாதிக்கின்றன. மேலும், பணிச்சுமை போன்ற காரணங்களால் 40 வயதுக்குட்பட்ட இளைய சமூகம் தினம்தினம் மனநலம் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், மக்களின் மனநலனை காக்கும் வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மனநல பிரச்சினையில் இருப்பவர்களுக்கு “14416” என்ற இலவச உதவி எண் மூலம் தொலைபேசி வழியாக 24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இந்தசேவை குறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தில் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்களை உள்ளடக்கிய சிறப்பு குழு, பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் தமிழ் நாடு முழுவதும் 81 ஆயிரத்து 342 அழைப்புகள் வந்துள்ளன.

ஆண்களே அதிகம்

மன உளைச்சல், வேலைப்பளு, மன கவலை, பாலியல் துன்புறுத்தல், உறவுகள் சார்ந்த சிக்கல்கள், தேர்வு பயம் உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு உதவி கோரியுள்ளனர். அவர்களுக்கு உடனுக்குடன் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அழைப்புகளில் சுமார் 5 சதவீதம், அதாவது ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் கடன் தொல்லை, குடும்ப சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை எண்ணத்தில் இருந்தனர். அவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை வழங்கி, அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளோம்.

இதில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களே பெரும்பாலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் மருத்துவ சேவை தேவைப்படுபவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்துகிறோம். ஒருமுறை உதவி எண்ணை அழைத்து உதவி பெறுபவர்களை, தொடர்ச்சியாக பின் தொடர்ந்து, அவர்களது நிலை குறித்துக் கேட்டறிந்து வருகிறோம். குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், இந்த உதவி எண்ணை, பெண்களை விட ஆண்களே அதிகம் அழைத்து ஆலோசனை பெற்றுள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *