பருகூர், நவ. 27- பெரியார் பற்றாளர் கிருட்டினகிரி ஜெ.சி.முருகன் மறைவு – கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத் தினர்.
கிருட்டினகிரி மாவட்டம் பருகூர் ஒன்றியம் ஜெகதேவி கிராமத்தை சேர்ந்த பணி நிறைவுப் பெற்ற வட்டாட்சியரும் தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர் சிந்தனையாளரும் கிருட்டினகிரி நகரில் பெரியார் மய்ய கட்டடம் இரண்டு தளம் மோல்டு அமைக்கலாம் என்ற பெரும் தன்நம்பிக்கையை கழக நிர்வாகிகளுக்கு ஊட்டிய வட்டாட்சியர் (ஓய்வு) ஜெ.சி.முருகன் அவர்கள் உடல்நல குறைவால் 25/11/2025-பகல் 12.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்னாரது மறைவு செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 26/11/2025 – காலை 11.30 மணியளவில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர்கள் வ. ஆறுமுகம், கு.முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, நகரத் தலைவர் கோ.தங்கராசன் மற்றும் கழகத் தோழர் களுடன் சென்று ஜெகதேவி அவரது இல்லத்தில் அன் னாரது உடலுக்கு மாலை அணிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.
