டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா..? ஆளுநரின் திமிரை அடக்குவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 17 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே; கொந்தளிக்கும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு 10 சதவீத ஒதுக்கீட்டில் முறைகேடு: தனியார் கல்லூரிகளில் ஒரு கோடி வரை கட்டணம் செலுத்தி வந்துள்ளது அம்பலம். 2021-2022 கல்வி ஆண்டு முதலே, போலிச் சான்றிதழ் தந்து பலரும் சேர்ந்துள்ளனர் என்கிறார் மகாராட்டிராவின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் பிரவீன் ஷிங்காரே.
* குஜராத் மாநிலத்தில் ‘67 லட்சம் வாக்காளர்கள் முறையான சரிபார்ப்பு இல்லாமல் சேர்க்கப் பட்டுள்ளனர்’: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம்: நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் புதன்கிழமை போராட்டங்களை நடத்தினர்.
தி டெலிகிராப்:
* அரசியலமைப்பு தினத்தில் ‘குடிமக்களின் கடமைகள்’ குறித்து பிரதமர் மோடி பேச்சு; ஆனால் பிரதமர் ஒரு குடிமகனாகவும் தலைவ ராகவும் தனது சொந்த அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுகிறாரா?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
– குடந்தை கருணா
