தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, அவர், சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு இன்று (27.11.2025) காலை 8.30 மணி அளவில் வருகை தந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அவருக்குத் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துக் கடிதம், புத்தகங்களை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளி கள் நினைவிடத்திற்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, பிறந்த நாள் விழா மேடைக்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணி வித்து, பிறந்த நாள்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
