என்னை சிந்திக்கத் தூண்டியவர் பெரியார்

2 Min Read

என்னைக் கவர்ந்த ஒரு மனித ஆளுமை தந்தை பெரியார். அவர் பெண்களுக்கு அளித்த மரியாதை என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. சமூக நலன் மற்றும் பெண்களின் உரிமைகளை ஒரு பெண் எப்படி வெளிப்படுத்துவார்களோ அதே போல வெளிப்படுத்தியவர் பெரியார். அவரை தாத்தா என்று அழைப்பதை விட மனம் விட்டு பேசக்கூடிய எனது பாய் ஃப்ரெண்ட் என்று அழைப்பது பொருத்தமானது.

ஆண்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப் படாதீர்கள். ஏனென்றால் அவன் செய்வதை எல்லாம் சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறது. பெண்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகள் ஏராளம். அவருடைய பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் வைத்தே எனக்கு சமூகத்தின் பேரில் ஆர்வம் வந்தது. பெரியார் தன்னுடைய கொள்கைகளை, கருத்துகளை ஆணித்தரமாக பேசக் கூடியவர். அதனால் அவர் மீது செருப்பு வீசும் சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

அதை எப்படி எதிர்கொள்வது, தடுப்பது எப்படி என்று  சிந்தித்து செயல்பட்டவர் பெரியார். பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அவரின் அணுகு முறைகள் மற்றும் தப்பு என்றால் அதை எதிர்த்து கடைசி வரை போராடும் குணம் வேறு எவரிடமும் காணாத ஒன்று. அவரைப்போல இன்னொருவர் தோன்ற முடியாது. தன்னுடைய உறுதியில் அவர் என்றுமே பின்னோக்கி சென்றது இல்லை. “யார் சொன்னாலும் எப்ப சொன்னாலும் நானே சொல்லி இருந்தாலும் உன்னுடைய சிந்தனைக்கு அறிவுக்கு எது சரி என்று படுகிறது அதையே பின்பற்று”  என்று தெளிவாக சொன்னவர் பெரியார்.

அது எனக்கு மிகவும் பிடித்தமான விசயம். என்னுடைய தோழிகளிடம் நான் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். அவரைப் பற்றி படிக்கவில்லை என்றால், அறிந்து கொள்ளவில்லை என்றால் நான் சமூகத்தை பார்க்கின்ற பார்வை மிகக் கேவலமாக இருந்திருக்கும். என்னை புதிய சிந்தனையாளராக, பகுத்தறிவு வாதியாக மாற்றியது பெரியார் தான். மேலும் பல உயர்வான சிறந்த பெரியாரின் பண்புகளை பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளம் பெண் ஒருவர் பேசியதை Periyar Vision OTT-இல் பாருங்கள் பயன் பெறுங்கள்.

J.விஜயகுமார், கழுகுமலை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :  periyarvision.com

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *