
மறைந்த கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் இல்லத்திற்கு 24.11.2025 அன்று நேரில் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிஞரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரது வாழ்விணையர் சாந்தகுமாரி, மகன் டாக்டர் பாப்லோ நெரூடா, கவிஞரின் தம்பி ந.வேலாயுதம் உள்ளிட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் கரு.அண்ணாமலை மற்றும் பல தோழர்கள் சென்றிருந்தனர்.
