தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2025 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறும். இம்மருத்துவ முகாமில் மருத்துவர்கள் கலந்துகொண்டு பொது மக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், நீரிழிவு சார்ந்த நோய்களுக்கு மருத்துவம் மற்றும் சிறப்பு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குருதிக் கொடை வழங்கும் நிகழ்வும் நடைபெறும். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை குருதிக் கொடை முகாம் நடைபெறவிருக்கிறது.
இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறைத் தோழர்கள் மற்றும் உடல் தகுதியுள்ள அனைவரும் குருதிக் கொடை வழங்கிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிர்வாகி
பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் திடல், சென்னை – 7
