பழனி, நவ. 25- ஒட்டன்சத்திரம் நகரில், 15.1.2025 அன்று மாலை6 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக துணைச்செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன் அலுவலகத்தில் பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு கழகக் காப்பாளர் புலவர் வீரகலாநிதி தலைமை வகித்தார்.
9.1.2026 அன்று ஒட்டன்சத்திரம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்து தொடர்பரப்புரை கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும், பெரியார் உலகத்திற்கு ரூ.10-இலட்சம் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட கழகச் செயலாளர் பொன்.அருண்குமார் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் வழக்குரைஞர் பி.ஆனந்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் பரிசாக 93 – விடுதலை சந்தாக்கள் வழங்குவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் ஆ.இராமகிருட்டிணன் தீர்மானங்களை வழிமொழிந்து ஊக்கவுரைவழங்கினார். திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில துணைச்செயலாளர் பெ.பாக்கிய லெட்சுமி மாவட்ட மகளிரணி,மகளிர் பாசறைக்கு புதியபொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார் பெருந்தொண்டர் புலவர் வீர கலாநிதி அவர்களது மகன் அரிஸ்டாட்டில் தமது மகன் சிபி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் படிப்பதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சிநிதி ரூ.1,000/வழங்கினார்.
சுயமரியாதை வீரர் பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன் விடுதலை சந்தாக்கள் வழங்கி திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகசி.இராதாகிருட்டிணன், திராவிடர் கழக தொழிலாளர் பேரவை செயலாளர் மு.நாகராசு, மாவட்டப.க.தலைவர் ச.திரா விடச்செல்வன், ஓவியர்சேக், புகழேந்தி அழகர், பழனிநகரதலைவர் அழகர்சாமி, பழனிநகரசெயலாளர் செந்தில், பெரியார் சமூககாப்பணிதோழர்கள் எம்.தினேசுகுமார், ப.பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
