டைம்ஸ் ஆப் இந்தியா:
* ரூ.1 கோடி கட்டணத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்துள்ள உயர்ஜாதி ‘அரிய வகை ஏழைகள்’: பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த (ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக) கிட்டத்தட்ட 140 வேட்பாளர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேலாண்மை மற்றும் என்.ஆர்.அய். (NRI) ஒதுக்கீட்டில் இருந்து மருத்துவ சிறப்புப் பாடங்களில் முதுகலை இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இதற்கான கல்விக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும். இது உயர்ஜாதி அரிய வகை ஏழைகள் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எஸ்அய்ஆர் பணிகளுக்கு ஒப்பந்த சேவை அமர்த்த (அவுட்சோர்சிங்) ஊழியர்களா? மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மம்தா கடிதம். மாவட்ட அலுவலகங்களில் ஏற்கனவே கணிசமான அளவு திறமையான வல்லுநர்கள் இருக்கும் நிலையில், ஓராண்டுக்கு ஒப்பந்த சேவை ஊழியர்களை அமர்த்த செய்ய வேண்டிய அவசியம் என்ன? தனியார் குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடிகளை அமைக்கும் திட்டமும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்.
* தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி டிச.4ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்; எஸ்அய்ஆர்க்கு காலக்கெடு நீட்டிப்பு இல்லை: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்: அடுத்த 15 மாதங்கள் பதவி வகிப்பார்
* ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டம், தொழிலாளர்களுக்கு விரோதமானது, அய்.என்.டி.யு.சி. கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தேர்தல் ஆணையத்தையும் பா.ஜ.க. அரசாங்கத்தையும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் ‘உரிமையைப் பறிக்க’ முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
தி டெலிகிராப்:
* 10 பேர் போலியாக கொல்லப்பட்டதாக கூறப்படும் என்கவுண்டர் தொடர்பான விசாரணை குறித்து மணிப்பூர் தேசிய புலனாய்வு முகவாண்மை அறிக்கை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு.
– குடந்தை கருணா
