எடப்பாடி, நவ. 25- சின்னமணலி – எடப்பாடி பெரியார் படிப்பகத்தில் 21.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொதுக்குழு உறுப்பினர் பெ.சவுந்திரராஜன் கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்டக் காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன் தொடக்கவுரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், பெரியார் உலகம் அமைப்பு முறைகளையும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பிற்கு தொண்டர்களின் நிதி பங்களிப்பு குறித்தும், வசூல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்தும் விரிவாக சிறப்புரை ஆற்றினார்.
மாவட்டக் காப்பாளர் பழனி.புள்ளையண்ணன், புத்தரின் போதனைகளை எடுத்துக்கூறி, தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்கவர்களாகவும், ஒழுக்கம், நாணயம் மிக்கவர்களாகவும், கழகத்திற்கு தொல்லை தராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், “நன்றே முயன்றிடின் வென்றே தீருவோம்” என்கின்ற உறுதிமொழியினை கூட்டத்தினர் அனைவரும் கூற, தனது கருத்துரையினை நிறைவு செய்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மேட்டூர் மாவட்ட காப்பாளரும் மேனாள் மாவட்டத் தலைவரும், சேலம் சுயமரியாதைச் சங்க கட்டட உறுப்பினருமான ந.கிருட்டிணமூர்த்தி (வயது 72) மறைவிற்கு (31.10.2025) ஆழ்ந்த இரங்கலை மாவட்டக் கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்ளுகிறது.
மறைந்த கழகத் தோழர் சிந்தாமணியூர் எல்லப்பன் (மறைவு 11.11.2025) அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கின்றது. மேட்டூர் கழக மாவட்டத்தின் சார்பாக ரூ.12 லட்சம் வழங்குவதென தீர்மானிக்கப்படுகிறது. இளைஞரணி, மாணவர் கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள் வழங்குவதென தீர்மானிக்கப்படுகிறது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆடசி, இதுதான் திராவிடம், திராவிட மாடல் ஆட்சி – ஆசிரியர் அவர்களின் 30.12.2025 செவ்வாய் மாலை 5 மணியளவில் நடைபெறும் பரப்புரை பொதுக் கூட்டத்திற்கான பதாகைகள், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் வைக்கலாமென முடிவெடுக்கப்படுகிறது.
50 விடுதலை சந்தாக்கள், உண்மை, பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தாக்களை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
நிதி திரட்ட பகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். எடப்பாடி பகுதி – தலைவர் கோவி.அன்புமதி, செயலாளர் சி.மெய்ஞான அருள், பொருளாளர் – பா.எழில் (மாவட்டச் செயலாளர் மகளிர் பாசறை), உறுப்பினர்கள் – அ.சத்தியநாதன், சா.ரவி.
ஒமலூர் பகுதி – தலைவர் பெ.சவுந்தரராசன், செயலாளர் உல.கென்னடி, பொருளாளர் – சி.மதியழகன், உறுப்பினர் – க.சிறீதர். மேட்டூர் பகுதி – தலைவர் இரா.கலையரசன், செயலாளர் மு.நேரு, பொருளாளர் – ப.அண்ணாதுரை, உறுப்பினர்கள் – அ.ப.ராசேந்திரன், சோமு, கபிலன், அமராவதி சோமசுந்தரம்.
எடப்பாடி பகுதி கண்காணிப்பாளர் – கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்), ஓமலூர் பகுதி கண்காணிப்பாளர் – மு.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்), மேட்டூர் பகுதி கண்காணிப்பாளர் – ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) மூன்று பகுதிகளுக்கும் நேரடி தொடர்பாளர்கள்.
பழனி.புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்). ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஒவ்வொரு பகுதியிலும் ரூ.4 லட்சம் வசூலிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
மேட்டூர் மாவட்டக் கலந்துரையாடல் – எடப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்தோர் பட்டியல்:
கா.நா.பாலு, (மாவட்ட கழகத் தலைவர்) ரூபாய் ஒரு லட்சம் குடும்பம் சார்பாக, ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) குடும்பத்தின் சார்பாக ரூ. 1 லட்சம். கோவி.அன்புமதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) ரூ.1 லட்சம். சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்) ரூ.25,000. ஆக, 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெரியார் உலகத்திற்கு நிதி அறிவிக்கப்பட்டது.
நிதி வசூல் செய்யும் அனைத்து இடங்களுக்கும் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்டக் காப்பாளர் பழநி.புள்ளையண்ணன், சிறப்பு அழைப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு, மாவட்ட செயலாளர் ப.கலைவாணன், ப.க. மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, ஆ.சத்தியநாதன், பெ.சவுந்திரராசன், பொதுக்குழு உறுப்பினர் சா.ரவி, கோ.குமார், ப.அண்ணாதுரை, சி.மெய்ஞான அருள், சி.இராஜாளி ஆகியோர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
