வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், வளர்ப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே மாறிவிடுகின்றன. சிலர் நாய்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டி மகிழ்கின்றனர். தற்போது ஒரு குடும்பம் அதையும் தாண்டி, நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
குட்டிப் போடப் போகும் தங்கள் வீட்டு நாயைப் புத்தாடை, மாலை, ஆபரணங்கள் அணிவித்து அலங்கரித்து, நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு சம்பிரதாயங்கள் (மூடச்சடங்கு) நடத்தப்பட்டன. நாய்க்கு அதன் முகத்தில் உரிமையாளர் மஞ்சள் பூசி சடங்கு செய்தார். அந்த நாயும் எதற்காக தேவையற்று இதையெல்லாம் செய்கின்றனர் என்பதை புரியாமல் உற்றுப் பார்த்தது. என்று தணியும் இந்த மூடத்தனம்!
