கழகத் தலைவர் ஆசிரியரின் சூறாவளி சுற்றுப் பயணத் திட்டம், நிகழ்ச்சிக்கு மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்து, அனைத்துத் தரப்பு கேட்பாளர்களையும் ஈர்க்கிறார்கள் நமது உழைப்புத் தேனீக்களான தோழர்கள்!
‘‘துறவிக்கும் மேலானவர்கள்’ எனது தொண்டர்கள் – தோழர்கள்” என்று நமது தொண்டற இலக்கணம்பற்றி மகிழ்ந்து பாராட்டினார் நமது அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார்.
மழை, கனமழை, இப்படிப் பல பருவம் தாண்டியும் கழகப் பிரச்சாரம் சிறப்புடன் நடைபெற வேண்டும். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தடைப்படுமோ என்ற அச்சமோ, தயக்கமோ, நமது கொள்கைப் பிரச்சாரத்தைத் தடுத்துவிடக் கூடாது.
ஆகவே, மழை பெய்தாலும், ‘குடிசெய்வார்க் கில்லை பருவம்’ என்ற இலக்கணத்திற்கு, இலக்கியமாய்த் திகழும் நம் தோழர்கள், ‘‘கூட்டத்திற்குக் குடையோடு வாருங்கள்’’ என்று கட்டாயம், விளம்பரத்தில் வேண்டுகோள் விடுத்து, மழை பெய்தாலும் கூட்டம் – பிரச்சாரத்தை நிறுத்தாமல், தொடர சிறந்த வழிமுறையாகும்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்
