ஆசிரியர்களை அரசு கைவிடாது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
விஜய்யுடன் கூட்டணி இல்லை…
அதிகாரப்பூர்வ முடிவு
அதிகாரப்பூர்வ முடிவு
தவெக – காங்., கூட்டணி உருவாகுமா என அண்மைக்காலமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்., அமைத்துள்ளது. இதன்மூலம், தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
1 கிலோ அரிசியின் விலை
ரூ.12,000 ரூபாயா!
ரூ.12,000 ரூபாயா!
கின்மேமை என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இதில் அதிக ஊட்டச்சத்து, சுவை இருக்கிறதாம். இதை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டியதில்லை. இதனால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. 1 கிலோ அரிசியின் விலை ரூ.12,000-க்கு விற்கப்படுவதால் இதை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். உலகின் மிக விலை உயர்ந்த அரிசி என்ற கின்னஸ் சாதனையையும் இது படைத்துள்ளது.
