டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வரும் 2026இல் மேற்கு வங்கத் தேர்தலை முன்னிட்டு, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் தன் வலுவான நிலைப்பட்ட கட்சி அமைப்பையும் களத்தில் உள்ள செயற்பாட்டாளர்களையும் நம்பி பாஜகவின் மிகப்பெரிய சவாலுக்கு எதிராக களமிறங்குகிறது. பாஜக வெளி மாநிலங்களில் இருந்து கட்சியினரை கொண்டு வர முயல்கிறது என்றும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் வாக் காளர்களை பாதிக்கின்றன என்றும் கண்டனம்.
* நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த செயல்பாட்டில் 3 வாரங்களில் 16 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO-க்கள்) உயிரிழந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி விசாரணை கோரியுள்ளது. இந்த நடவடிக்கை “திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை” என்றும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுப் போராடும்: முக்கியமான குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தியா கூட்டணி ஒன்று பட்டுள்ளதாக காங்கிரஸ் கருத்து. இந்த அமர்வின் போது எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படும் முக்கிய விசயங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்த முன்னணியை முன்வைக்கத் தயாராக உள்ளன என்று மாணிக்கம் தாகூர் மேலும் கூறினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரியில் முஸ்லிம்கள் சேருவதற்கு பாஜக எதிர்ப்பு: சிறீநகர்: கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள், பெரும்பாலும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், சேர்க்கைக்கு பாஜக, விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
* சண்டிகரை 240ஆவது பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசின் முயற்சி பஞ்சாப் கட்சிகள் கடும் எதிர்ப்பு: இந்நிலையில் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
– குடந்தை கருணா
