கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு – தோழர்கள் – பெருமக்கள் சந்திப்பு!
திரண்டு வாரீர் தோழர்களே!
சென்னை, நவ.24 தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறை விற்குப் பிறகு, இயக்கத்தை வலிமை யோடு வழிநடத்தியும், நாட்டின் பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணும் வழிகாட்டி யாகவும், சமூகநீதித் தடத்தில் தனி முத்திரை பொறித்தும், தந்தை பெரியார்தம் வாழ்வியல் கொள்கை நெறியை உலக ளாவிய அளவில் கொண்டு சென்றும். 92 ஆம் அகவையிலும் பம்பரம் போல் சுற்றிச் சுழன்றும் பணியாற்றிவரும் நமது அருமைத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வரும் டிசம்பர் 2 ஆம் தேதி காலை முதல் இரவு வரை பல்வேறு அம்சங்களுடனும், சீரும் சிறப்புமாக சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கிறது.

அன்று காலை 10 மணிக்குத் தோழர்களும், பெருமக்களும் சந்திக்கும், வாழ்த்துக் கூறும் நிகழ்ச்சியோடு விழா தொடங்குகிறது.
பெரியார் உலகத்திற்கு நிதியளிக்கக் கூடியவர்கள் அந்தச் சந்திப்பின்போது அளிக்கலாம்.

பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் மற்றும்
பெருமக்கள் பங்கேற்று உரை
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கொள்கை உரை நிகழ்த்துவார்.
மதிய விருந்துக்குப் பிறகு 2.30 மணிமுதல் 5 மணிவரை பட்டிமன்றம், கவியரங்கம், ‘மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கழகப் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி தலைமையில் பட்டிமன்றமும், கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கமும் நடைபெறும்.

மாலை 5 மணிக்குத் ‘‘தலைமுறை இடைவெளியின்றி’’ என்ற பொதுத் தலைப்பின்கீழ் கருத்தரங்கம் நடைபெறும். சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், ஊடகவியலாளர்கள் ஜீவசகாப்தன், இந்திரகுமார் தேரடி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர்
சே.மெ. மதிவதினி, பெரியார் பிஞ்சு சித்தார்த் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுவர்.
நூல் வெளியீடு – வாழ்த்தரங்கம்
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வரவேற்புரை வழங்க, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நூல் வெளியீட்டு விழாவும், வாழ்த்துரையும் தொடரும்.

கவிப்பேரரசு வைரமுத்து, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் ஆகியோர் நூல்களை வெளி யிட்டு உரையாற்றுவர்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். வாழ்த்துரை வழங்குவார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரை நிகழ்த்துவார்.
தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து, நமது அருமைத் தலைவரைச் சந்தித்து கலந்துறவாட வாரீர், வாரீர் என அழைக்கிறோம்!
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
