சென்னை, நவ.23– வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கத்தலைவரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம் தமிழுக்கு தொண்டு செய்யும் வகையிலும், திருவள்ளுவரின் பெருமையை உலகம் முழுவதும் பரப்புவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில், உலகின் பல்வேறு நாடுகளில் வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் 189 திருவள்ளுவர் சிலை நிறுவியுள்ளார். மேலும், திருக்குறளின் அருமை, பெருமைகளை பல்வேறு வகையில் பரப்பி வருகிறார்.
இந்த சிறப்பான பணிக்காக
வி.ஜி.சந்தோசத்தை கவுரவிக்கும் வகையில், தென்கொரியத் தமிழாய்வு அமைப்பு விருது வழங்க முடிவு செய்தது. அதன்படி, இதற்கான விழா தென்கொரியத் தலைநகரான சியோலில் உள்ள செஜாங் பல்கலைக்கழத்தில் நடந்தது. விழாவில், வி.ஜி.சந்தோசத்திற்கு ‘திருவள்ளுவர் உலகத்தூதர் வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது.
