கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? பிரதமர் மோடியை சந்திக்க தயார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ.23– கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக் கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை, மதுரை மாநகரங்க ளுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதற்கு எனது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதிக அளவிலான தனி நபர் வாகனங்களை கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. எனவே அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுகின்றன. இதற்காக கோவை, மதுரை மெட்ரோ ரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தாங்கள் தயாரித்து. அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தோம்.

தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக் கப்பட்ட மற்ற அதே போன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பது அங்குள்ள மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்ததிட்டங்களை தொடர்ந்து வலியுறுத்தி, 24.5.2025 மற்றும் 26.7.2025 ஆகிய நாட்களில் உங்களை நேரில் சந்தித்து, முன்னுரிமை கோரிக்கைகளில் உள்ள இத்திட்டங்கள் குறித்து உங்களிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளேன்.

மற்ற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், மெட்ரோ ரயில் திட்டம் குறித்த எங்களது கோரிக்கையை நிராகரித்தது, எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அமைச்சகத்தால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை. மெட்ரோ ரயில் கொள்கை 2017-இல் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் கோவை உள்ளூர் திட்டப்பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டிலேயே 20 லட்சத்தை தாண்டியிருந்தது. மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையைவிட அதிகமாக இருக்கும். 20 லட்சம் என்ற அளவுகோல் ஒரே மாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டி ருந்தால், ஆக்ரா, இந்தூர், பாட்னா போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை.

20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோலை சுட்டிக் காட்டுவது என்பது, இந்த 2 நகரங்களுக்கு எதிரான ஓன்றிய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுகிறது. ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களில் இதை செயல்படுத்த  மேற்கொண்ட முடிவைப்போல் கோவை, மதுரையிலும் செயல்படுத்த ஏதுவாக இந்த அளவுகோலை நீக்க வேண்டும்.

நிலம் ஒரு தடை இல்லை

கோவையில் இந்த திட்டத்திற் கான பயணிகளின் அடர்வு எண்ணிக்கை, சென்னையின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை என்பது பல காரணிகளை சார்ந்திருப்பதால் அது பொருத்தமானதல்ல. அந்த இரண்டு நகரங்களும் சென் னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன.

விரிவான திட்ட அறிக்கை ஆய்வுகள், போக்குவரத்து கணிப்புகளின் அடுத்தடுத்த, தனிப்பட்ட மதிப்பீடுகளைச்  செய்துள்ளன. இது மெட்ரோ ரயில் வழித்தடங்களின் தேவையை நியாயப்படுத்துகிறது. ஆனால் இந்தக்காரணிகளை போதுமான அளவு கருத்தில் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் தற்போதைய திட்டத்தில் நில உரிமையாளர்களின் எதிர் பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இழப்பீட்டை தமிழ்நாடு அரசே வழங்கி வருகிறது. கோவை, மதுரையில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது ஒரு தடையாக இருக்காது என்பது உறுதி.

மறுபரிசீலனை

ஒன்றிய அமைச்சகம் எழுப்பியுள்ள இதுபோன்ற ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். எனவே கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவை திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். தேவைப் பட்டால் விரிவான விளக்கம் அளிக்க எனது குழுவுடன் டில்லிக்கு வந்து உங்களை சந்திக்கிறேன். இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *