சென்னை, நவ.23 தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில் பயன்பெற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் போலியானது எனத் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், “தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது… விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன.
குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன! காலக்கெடு: 11/22/2025” எனக் கூறி ஒரு பதிவு செய்வதற்கான இணைப்புடன் (Link) செய்தி பரவி வந்தது.
சமூக வலைதளங்களில் பரவிய இந்தத் தகவல் உண்மையில்லை எனவும், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காகத் தனியாக இணைய தளத்தில் விண்ணப்பிக்க எந்த அறிவுறுத்தலும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை.
