பெரியார் உலகத்திற்கு ஆத்தூர் கழக மாவட்டம் சார்பில் பெரும் நிதி திரட்டித் தர கலந்துரையாடலில் முடிவு

ஆத்தூர், நவ.23 ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.11.2025 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட காப்பாளர் த. வானவில் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காப்பாளர் த. வானவில் தலைமை வகித்தார். நகரத் தலைவர்

வெ. அண்ணாதுரை  வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட காப்பாளர் இரா விடு தலைச் சந்திரன், மாவட்ட செயலாளர், நீ. சேகர், ஒன்றிய செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் டிசம்பர் 17 ஆத்தூர் வருகை, ரியார் உலகத்திற்கு நிதி திரட்டல் ஆகியவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.  மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன்  சிறப்புரை ஆற்றியபோது,

திருச்சி சிறுகனூரில்…

பீகாரிலே புத்தருக்கு சிலை இருப்பது போல, குஜராத்தில் பட்டேலுக்கு சிலை இருப்பது போல, ஆந்திராவில்  டாக்டர் அம்பேத்கருக்கு சிலை இருப்பது போல, தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிலையை நிறுவ வேண்டும். அதுவும் பொது மக்களின் பங்களிப்புடன் தமிழர்களின் தன்மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய சுயமரியாதை சூரியன் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களுக்கு  சிலை நிறுவ வேண்டும் என்று  தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் முன்னெடுப்பால் கடந்த சில ஆண்டுகளாக திருச்சி சிறுகனூரில் அதன் கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு  திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக, நான் உள்பட திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்த்து ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்குகிறோம்’’ என்று கூறியதோடு இல்லாமல், அனைவரும் சேர்ந்து  ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்.

தமிழ்நாடு

அதே போல  மூன்றாவது குழல் துப்பாக்கியாக செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில், அவரது கட்சியின் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ருபாய் பத்து லட்சத்தினைத்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

அதே போல  திராவிடர் கழக பொதுக்குழுவில் முடிவெடுத்தது போல் ஒவ்வொரு கழக மாவட்டங்களின் சார்பாக  மாவட்டத்திற்கு குறைந்தது  பத்து லட்சம் ரூபாய் அதற்கு மேலும்  வழங்கிட

நாம் தயாராக வேண்டும் என கூறியதோடு, அந்தந்த கழக மாவட்டங்களிலும் ஒன்றிய நகர வாரியாக பிரித்து, அந்தந்த பகுதி தோழர்களின் வழிகாட்டுதலுடன்  அனைத்து  கட்சி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள்,

முற்போக்குச் சிந்தனையாளர்கள், நன்றி உணர்வுடன் இருக்கும் அரசு ஊழியர்கள் போன்றவர்களை நேரில் சந்தித்து, பெரியார் உலகத்திற்கு நிதி கேட்டால், நம் இலக்கை விட அதிகமாக  எளிதாக நிதியை திரட்டி விடலாம் என ஆலோசனை வழங்கினார்.

அதன் அடிப்படையில், ஆத்தூர் கழக மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, தம்மம்பட்டி  என நான்கு குழுவாக பிரிக்கப்பட்டது.

இந்த நான்கு குழுகளுக்கும் தலைமைப் பொறுப்பா ளர்களாக, மாவட்ட காப்பாளர் த. வானவில், மாவட்ட காப்பாளர் இரா. விடுதலை சந்திரன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வா. தமிழ்பிரபாகரன், மாவட்ட தலைவர் அ. சுரேஷ், மாவட்ட செயலாளர் நீ. சேகர், மாநில ஒருங்கிணைப்பாளர்  ஊமை ஜெயராமன் என திட்டமிடபட்டுள்ளது

முதலாவதாக  ஆத்தூர் நகர பொறுப்பாளராக  நகர தலைவர் வெ.அண்ணாதுரை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ. அறிவு செல்வம், ச. வினோத் குமார், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பா ளர் விஜய்ஆனந்த், ஒன்றிய செயலாளர் ஆ. செல்வம், நரசிங்கபுரம் நகர தலைவர் வே. மணி, நரசிங்கபுரம் நகர செயலாளர் க. நல்லசிவம், நரசிங்கபுரம் நகர அமைப்பாளர் மருத பழனிவேல், மெடிக்கல் மு.மனோ கரன், நகர செயலாளர் தா. திவாகர் ஆகியோர் ஆத்தூர் நிதிக் குழுவில் சேர்ந்து ருபாய் அய்ந்து லட்சம் திரட்டித் தருவதாக முடிவெடுக்கப்பட்டது.

இரண்டாவதாக, வாழப்பாடியில் மாவட்ட மகளி ரணி தலைவர் அமிர்தம் சுகுமார், தொழிலாரணி செயலாளர் சிங்கிபுரம் கூத்தன், மாவட்ட துணை செயலாளர் ப. வேல்முருகன், தொழிலாரணி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞரணி செய லாளர் சத்தியமூர்த்தி வீரன் ஆகியோர் வாழப்பாடி சார்பாக ருபாய் இரண்டு லட்சம் நிதி திரட்டித் தருவதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவதாக, தலைவாசல் பகுதியில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன், பகுத்தறிவாளர் கழக  மாவட்ட தலைவர் வ. முருகானந்தம், தலைவாசல் ஒன்றிய தலைவர்  வேப்பம்பூண்டி து.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணை தலைவர் கா. பெரியசாமி  ஆகியோர் ருபாய் இரண்டு லட்சம் நிதி திரட்டித் தருவதாக அறிவிக்கப்பட்டது.

நான்காவதாக தம்மம்பட்டி பகுதி யில் தம்மம்பட்டி நகர தலைவர் இரா.வீராசாமி, செந்தாரப்பட்டி  பகுத்தறி வாளர் கழக தலைவர் ரெ.மூ.நடராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. கார்முகிலன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச. அஜித்குமார் ஆகியோர் ருபாய் ஒரு லட்சம் நிதி திரட்டி தருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் ஏவி.தங்கவேல், சிங்கிபுரம் கூத்தன், தும்பல் அங்கமுத்து, விஜய் ஆனந்த், மோகன்ராஜ், இரா. கார்முகிலன்,
ச. அஜித்குமார் ஆகியோரோடு சிறப்பு அழைப்பளாராக சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜீவ் அவர்கள் வருகை தந்து  சிறப்பு செய்தனர்.

நிறைவாக மாவட்ட துணை செயலாளர்
ப. வேல்முருகன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

பின்னர், ஆத்தூர் விநாயகர் கோயில்  இந்து அறநிலையத் துறை தலைவரும் திமுக பொறுப்பா ளருமான ஜெ.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவதற்காகவும், மாலையில் பொதுக்கூட்டம் பேசுவதற்காகவும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் டிசம்பர் 17 ஆம் தேதி ஆத்தூருக்கு வருகை தருகிறார். ஆகையால் உங்களுடைய பங்களிப்பும் தேவை என உரையாற்றினார் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யா ஊ. ஜெயராமன்.

நான் மேடையிலேயே ஆசிரியர் அவர்களிடம், எனது குடும்பத்தின் சார்பாக ருபாய் ஒரு லட்சம் கொடுத்து விடுகிறேன் என்றார்.

டிசம்பர் 17 ஆம் தேதி

பின், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொரு ளாளர் சிறீராமைச் சந்தித்து ஒரு நல்வாய்ப்பாக நமது ஆத்தூர் நகருக்கு ஆசிரியர் அவர்கள் டிசம்பர் 17 ஆம் தேதி வருகிறார். ஆகையால் தாங்கள் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வரு கையை  சிறப்பு செய்ய வேண்டும்  என கூறியபோது உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆசிரியர் அவர்கள் ஆத்தூர் வருகையை சிறப்பாக செய்து முடிப்போம் என்று கூறினார்.

பின்னர்,  பெரியார் பெருந்தொண்டர் பெ. சோம சுந்தரத்தை, அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரிக்க சென்றபோது அவர் சேலத்தில் தனது மகன் வீட்டில் இருப்பதாக கூறினார்.

பின்பு, கழக தோழர்கள் அனைவரிடமும் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் ஆத்தூர் வருகையை அனைவரும் இணைந்து  சிறப்பாக நடத்திட வேண்டும்; நன்கொடையாளர்களை நேரில் சந்தித்து பேசி அழைப்பிதழ் அச்சிடத் தாயாராகுங்கள்; நாள்கள் மிகக் குறைவாக உள்ளது என மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் கூறி நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *