பெரியார் உலகத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கிட திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருச்சி, நவ.23 பெரியார் உலகத்திற்கு ரூ.20 இலட்சம் வழங்கிட திருச்சி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நவ.19 ஆம் தேதி காலை 11 மணியளவில், புத்தூர் பெரியார் மாளிகை யில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்துக்கு மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

இக்கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக  மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் கலந்து கொண்டு திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் குறித்தும் திருச்சி மாவட்டம் சார்பில் வசூல் பணியை எவ்வாறு மேற்கொள்வது  என்பதன் நோக்கத்தையும் வருகிற நவ.26 ஆம் தேதி லால்குடியில் நடைபெறும் ஜாதி ஒழிப்பு  69 ஆம் ஆண்டு  நினைவுநாள் வீரவணக்க மாநாட்டில் திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பாக பெருமளவில் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

மேலும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மகாமணி,  மாநில மாணவர் கழக துணை செய லாளர் அறிவுச்சுடர், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் தமிழ்ச்சுடர் , பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலி முத்து, கனகராஜ், செந்தமிழினியன், பகுத்தறிவாளர் கழக தலைவர் மதிவாணன், துணைத் தலைவர் குத்புதீன், துணை செயலாளர் பென்னி , ப.க மணியன், மகளிர் அணி பேபி, விஜயராகவன், குணசேகரன், திருநாவுக்கரசு, மாநகர தலைவர் ராமதாஸ், மாவட்டத் துணைத் தலைவர் ராஜசேகர், கணேசன், விடுதலை செல்வம், தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

மண்ணச்சநல்லூர் ஒன்றியம், வாழ்மானப்பாளையம் கீழூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாசலம் (வயது 92). 18.11.2025 இல் மறைவுற்றார்.

மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பிச்சாண்டார் கோயில் கழகத் தோழர் காமராஜின் வாழ்விணையர் (வயது 58) மலர்க்கொடி 19.11.2025 காலை 11 மணியளவில் மறைந்தார்.  அவர்களுக்குக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 23 சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என  முடிவு செய்யப்படுகிறது.

நவம்பர் 26 காலையில் இலால்குடி பெரியார் திருமண மாளிகையிலும், மாலை கீழவாளாடியிலும் நடைபெறும் ஜாதி ஒழிப்புக்கான சட்டஎரிப்பு போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க மாநாட்டில் திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க இலால்குடி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

திருச்சி சிறுகனூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும் முயற்சியில் ரூ.110கோடி செலவில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், பெரியார் பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் சந்தித்து பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதியை திரட்டி ரூ.20 லட்சத்திற்கு  மேல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது பிறந்த நாள் விழா (சுயமரியாதை நாள்) டிசம்பர் -2 திருச்சி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது. டிசம்பர் -2 சென்னை பெரியார் திடலில் நடைபெறும் 93 ஆவது பிறந்த நாள் விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தோழர்களும் பங்கேற்று நமது தலைவரை சந்தித்து வாழ்த்துக்  கூறி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் முடிவடைந்த விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய விடுதலை சந்தாக்களை சேர்த்தும் 93 ஆவது பிறந்த பரிசாக டிசம்பர்  -2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

நிறைவாக திருவரங்கம் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார் .

பெரியார் உலகம்  நிதி வசூல் குழு
திருச்சி மாவட்டம்

ஒருங்கிணைப்பாளர் : மாநில ஒருங்கிணைப்பாளர்,  இரா.ஜெயக்குமார்

தலைவர் : மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்

செயலாளர்: மாநில கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்

துணைத் தலைவர்கள். ப. லெ. மதிவாணன். (மாவட்ட ப.க.தலைவர்), ச. துரைசாமி (மாவட்ட துணைத் தலைவர்), சு. மகாமணி, (மாவட்டச் செயலாளர்), ரெஜினா பால்ராஜ் (மாவட்ட மகளிர் அணித்தலைவர்).

துணை செயலாளர்கள் : தமிழ்ச்சுடர் (திருவெறும்பூர் ஒன்றிய தலைவர்), அம்பிகாகணேசன் ( மாநில மகளிர் பாசறை துணை செயலாளர்),  மலர்மன்னன் (மாவட்ட ப.க. செயலாளர்)

உறுப்பினர்கள் : பொறியாளர் சண்முக வடிவேலு (ப.க.),  குத்புதீன் (மாநகர  தலைவர்), பென்னி (மாநகர ப.க. செயலாளர்), ஆ. அறிவுச்சுடர் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்),  சங்கிலிமுத்து (பொதுக்குழு உறுப்பினர்), கனகராஜ் (பொதுக்குழு உறுப்பினர்),  அசோக்குமார் (பெல்.தி.தொ.க. தலைவர்),  ஆண்டிராஜ் (பெல். தி.தொ.க.செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர்),  சு.ராஜசேகர் (மாவட்ட துணைச் செயலாளர்), ஹரிஹரன் (விடுதலை வாசகர் வட்ட செயலாளர், திருவரங்கம்),  சா.கண்ணன் (திருவரங்கம் நகர தலைவர்),  இரா.மோகன்தாஸ் (திராவிடர் கழகம்), இரா.முருகன் (திருவரங்க நகர செயலாளர்),  மா.செந்தமிழினியன் (விடுதலை செய்தியாளர்),  பாலமுருகன் (மணப்பாறை ஒன்றிய தலைவர்),  ரமேஷ் (மணப்பாறை நகர செயலாளர்),  குணா (ஜெயில் பேட்டை பகுதி செயலாளர்),  அசோக் (மணப்பாறை ஒன்றிய செயலாளர்), கிருஷ்ணமூர்த்தி  (பகுத்தறிவாளர் கழகம்),  ரூபியா ஸ்டாலின் (திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), அ. காமராஜ் (காட்டூர் பகுதி தலைவர்), சாந்திசுரேஷ் (மாவட்ட மகளிர் அணி செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *