மக்கள் கவனத்திற்கு

இதுவரை புதிய குடும்ப அட்டை வாங்காதவர்கள்
இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு நன்மை

சென்னை, நவ.22– இதுவரை புதிய குடும்ப அட்டை வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல் பலன் என்னவென்றால், மகளிர் உரிமைத் தொகை. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பெற வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக இரண்டாவது வாய்ப்பு என்றால், ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு தேர்தலுக்கு முந்தைய ஜனவரி மாதத்தில் பொங்கல் பரிசாக பணம் தந்துள்ளது. 2019 முதல் 2024 வரையிலான ஆண்டுகளே சாட்சி. எனவே அந்த பணமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்றைக்கு குடும்ப அட்டை மிகவும் இன்றியமையாதது. அது இல்லாவிட்டால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது, அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் பெறுவது சாத்தியமே இல்லை.. அதேபோல் குடும்ப அட்டையான ‘ரேஷன்’ அட்டை  தான் ஒரு குடும்பம் என்பதற்கான அடையாளம்.. குடும்ப அட்டை வாங்கிவிட்டால், எளிதாக வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடலாம். அங்கு நிரந்தமாக குடும்பமாக வசிக்கும் ஒருவருக்கு அரசின் சலுகைகள், உரிமைகள் பெறுவதற்கு இன்றைக்கு குடும்ப அட்டை முக்கியமானது.

புதிதாக திருமணம் ஆனவர்கள் அல்லது ஏற்ெகனவே திருமணம் ஆகி தனியாக வசித்தாலும் இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பித்து குடும்ப அட்டை வாங்கினால், அரசின் இரண்டு பெரிய சலுகைகளை பெற முடியும்..

சலுகை ஒன்று

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக குடும்ப அட்டை வாங்கினால், ஜனவரி மாதம் அரசு ஒருவேளை பொங்கல் பரிசாக ஏதாவது ரொக்கம் தந்தால், அதனை வாங்கிவிட முடியும். அத்துடன் பொங்கல் பரிசும் வாங்க முடியும். கடந்த 2019, 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய காலக்கட்டங்களில் வழங்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு மட்டும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கப்படவில்லை..

பொங்கல் பரிசு

ஆனால் 2026 ஜனவரியில் ‘பொங்கல் பரிசு’ மற்றும் ரொக்கம் வழங்கப்பட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. எவ்வளவு தொகையை அரசு வழங்கப் போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் வழக்க மாக வழங்கப்படும் ரூ.1000 அல்லது ரூ.2000த்தைவிட அதிகமாக தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே தொடக் கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. எனவே அரசு வாக்காளர்களை கவர பொங்கல் பரிசு தருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள் ளது. எனவே பொங்கல் பரிசு பெற விரும் புவோர் ஜனவரி மாதத்திற்கு முன்பே குடும்ப அட்டை பெற்றுவிட்டால், அவர்களுக்கும் பரிசு தொகை (ஒரு வேளை அறிவித்தால்), கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சலுகை இரண்டு

அதேபோல் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் குடும்ப அட்டை வாங்கிவிட்டால், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். அதன் மூலம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கக்கூடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையோருக்கு அரசு கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகையை தாமதிக்காமல் வழங்கிவிடும். விரைவாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

புதிய குடும்ப அட்டைக்கு இணைய வழியில் எளிதாக விண்ணப்பிப்பது எப்படி?

குடும்ப அட்டை இருந்தால் மட்டுமே வெள்ளம், எதிர்பாராத பிரச்சினைகள் வரும் போது, அரசிடம் நிவாரணம் பெறவும் முடியும். குடும்ப அட்டை பெறுவதற்கு இணைய வழியிலேயே எளிதாக விண்ணப்பிக்க முடியும். https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் எளிதாக விண்ணப்பிக்க முடியும். கணவன், மனைவி இருவரின் பெயரும் அவர்களது குடும்ப அட்டையில் நீக்கப்பட்டதற்கான ஆவணங்கள், திருமண பத்திரிக்கை, ஒளிப்படம், குடியிருக்கும் இடத்திற்கான ஆதாரங்கள் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் எளிதாக விண்ணப்பிக்க முடியும். வருவாய்த் துறை அலுவலகம் சென்று அலைய வேண்டியது இல்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *