5.5.2023 அன்றையத் தொடர்ச்சி…
மதச்சார்பின்மை
அமெரிக்கா எப்படி?
கலி.பூங்குன்றன்
இந்தியாவில் பல்வேறு மதங் கள் உள்ளன; அமெரிக்க அய்க் கிய நாட்டில் கிட்டத்தட்ட ஒரே மதம்; பெரும்பாலும் கிறிஸ்த்துவர்கள். அந்த நாடு நினைத்திருந் தால் ஒரு மதச் சார்பான அரசாக அறிவித்திருக்கலாம்; தட்டிக் கேட்க ஆளும் இல்லை. ஆனாலும் அங்கு அரசு எப்படி நடக்கிறது? மதச்சார்பற்ற என்ற ஆடையை வெறும் பகட்டாடையாக அணிந்து கொண்டிருக்கும் இந்திய அரசு அமெரிக்காவை தமது அகலக் கண்களால் பார்க் கவேண்டும். கூடாததற்கெல்லாம் கூடி அமெரிக்காவோடு கூத்தடிக்கும் இந்த அரசு, உருப்படியான இந்தக் கொள்கை யைச் சற்றுக் கூர்மையாகக் கவ னிக்கக் கூடாதா?
அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் அறிவியல் பாடத் திட்டத்தில் மனித உற்பத்தித் தோற்றம் (Creation Science) பைபிளில் கூறியபடி வகுக்கப்பட்டு, மாணவர் களுக்குப் போதிக்கப்பட வேண் டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.
இதனை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக் கைத் தொடுத்தவர் அமெரிக்க சிவில் உரிமை இயக்குநர் புரூஸ் என்னீஸ் என்பவர். இது டார்வினின் அறிவியல் ரீதியில் நிறுவப்பட்ட பரிணாம தத்துவக் கருத்துக்கு முரணானது. கடவுளால் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று பைபிள் கூறுவதை மாணவர்களுக்குப் போதிப்பது அறிவு வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று வழக்குத் தொடுத்தவரே வாதா டினார் நீதிமன்றத்தில்.
வழக்கை விசாரித்த வில்லி யம் ரே ஓவர்டோன் என்ப வர் வழக்கை ஏற்றுக்கொண்டு அரசின் பாடத்திட்டம் செல் லாது என்று தீர்ப்பு அளித்தார்.
“மனிதன் கடவுளால் உண்டாக்கப்பட்டவன் அல்ல; பள்ளிகளில் பைபிளைப் புகுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” – என்று நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இது நடைபெற்றது அமெரிக் காவில்! நம் நாட்டுப் பாடத்திட்டத்தை இந்த உரைக்கல்லில் வைத்து உரைத் துப் பார்த்தால் ஒரு கை பிடிக்காவது நிற்குமா? இன்னும் திருவிளையாடல் புராணங்களையும், வில்லிப்புத்தூரார் புராணங்களையும், கம்ப ராமாயணத்தையும், கந்த புராணத்தையும் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறோமா இல்லையா?
“பித்தா பிறைகுடி பெருமான்” என்று கடவுள் வாழ்த் துப் பாடலாகத் தமிழ்ப் பாடத்தில் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா?
இன்னொரு நிகழ்ச்சியை இந்த நேரத்தில் எடுத்துக் காட்டுவது பொருத்தமாகவே இருக்கும். 1979 ஆம் ஆண்டு போப் அமெரிக்க நாட்டின் மிக முக்கிய நகரமான வாஷிங்டனுக்கு வருகை தந்தார்.
போப்பின் தொழுகைக்காக வாஷிங்டனில் 200 ஆயிரம் டாலர் செலவில் மேடை ஒன் றைக் கட்டியது வாஷிங்டன் நக ராட்சி! பின்னர் அந்த செலவை யார் ஏற்றுக்கொள்வது என்ப தில் சர்ச்சை ஏற்பட்டது. நகரத் தில் நகரப் பொது மக்களின் வசதிக்காகக் கட்டப்பட்டது என்பதால் அதை நகர நிர்வா கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ‘சர்ச்’ நிர்வாகம் கூறியது.
இதனை ஒட்டித் தொடரப்பட்ட வழக்கில், “சர்ச்சுதான் இந்தச் செலவை ஏற்கவேண்டும்; மத விவகாரங்களுக்காக அரசு பணம் செல்விடுவது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது” என்று நீதிபதி தீர்ப்புக் கூறினார்.
இந்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பையும், நம் நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்பையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் அமெ ரிக்க நீதிமன்றத்தின் நீதி வழுவாப் பெரும்பண்பையும் பாரத ‘புண்ணிய பூமியின்’ பார்ப்பனத் தன்மையும் பளிச்சென்று புரியும்.
மதச் சார்பற்ற தன்மை என்றால் என்ன என்பதை அமெரிக்காவைப் பார்த்த பிறகாவது நம் நாட்டு நீதிமன்றமும், ஆட்சி மன்றமும் கண்களைத் திறக் குமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி,
முதல் அமைச்சர்
அறிஞர் அண்ணாவின் ஆணை
மதச்சார்பின்மை என்ற கொள்கைக்கு அவ்வப் பொழுது மாற்றுப் பொருள் சொல்லி, நடைமுறையில் அக்கிரகார மயமாகவே ஆட்சி நடப்புகள், அரசு அலுவலக நடவடிக் கைகள் அமைந்து வந்தாலும், சில மாநிலங்களில் உண்மை யான மதச் சார்பின்மை பக்கம் தொட்டுக்கொள்கிற அளவிலும், துடைத்துக்கொள்கிற அளவிலும் ஆணைகள் பிறப்பிக்கவும் பட்டன.
1974 அக்டோபரில் கேரள மாநிலத்தில் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
“மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதனால் வகுப்புக் கலவரங் களுக்கு வித்திடக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. எனவே மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்துகொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த ஆணை அரசாங்க பள்ளி களிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும்” என்றும் அவ்வா ணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தி 1974 அக்டோபர் 11 நாளிட்ட செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது.
வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில்
ஆந்திர மாநிலம் வெங்கடேசு வரா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சச்சிதானந்த மூர்த்தி அவர்கள் 1976 அக்டோ பரில் ஒரு சுற்றறிக்கையைப் பல் கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பினார்.
1) பல்வேறு மதங்களை உள் ளடக்கிய மதச்சார்பற்ற ஜன நாயகக் குடிஅரசு நாட்டில். ஒரு மதத்துக்குச் சொந்தமான பாடலை கடவுள் வாழ்த்தா கப் பாடக்கூடாது. எனவே பல்கலை நிகழ்ச்சிகள் எதி லும் கடவுள் வாழ்த்து தேவையில்லை. எல்லா மதப் பாடல்களையும் பாடுவது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது.
2) தேசிய கீதம் குடிஅரசுத் தலைவர், பிரதமர், ஆளு நர் முதலமைச்சர்கள் கலந்துகொள் ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே இசைக்கப்படவேண்டும்.
3) பல்கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்க களுக்கு மாலைகள் அணிவிக்கக் கூடாது. பல்கலைக் கழகத்திற்கு ‘வெளியே இருந்துவரும் விருந் தினர்களுக்கு மலர்ச் செண்டு அளிக்கலாம் என்று ஆணை ஒன் றினைப் பிறப்பித்தார்.
பார்ப்பனர்களும், ‘இந்து’ ஏடும் கொடுத்த பெருந் தொல்லையால் சில நாள்களில் இந்த ஆணையில் திருத்தம் செய்யும் படி நேர்ந்தது.
தமிழ்நாட்டில்
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன நிலையில் மிக முக்கிய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். பொது (ஜெனரல் எம்) இலாகா நினைவுக் குறிப்பு எண் 7553/66-2, நாள் 29 ஏப்ரல் 1968.
பொருள்: எந்த மதத்தைச் சேர்ந்ததாயினும் கடவுள் கள் – பெண் கடவுள்கள் – படங்கள் – சிலைகள் ஆகிய வற்றை பொது அலுவலகங்களிலிருந்து நீக்குதல்.
இலாகா தலைவர்களுக்கு அறிவித்துக்கொள்ளப்படு வதாவது: மதச் சார்பற்ற கொள்கை உடைய ஆட்சியா தலால் எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், (சாதுக்கள், மகான்கள், அவதா ரங்கள் உட்பட) கடவுள்கள், பெண் கடவுள்கள் ஆகியவற் றின் படங்கள் – சிலைகள் முத லியவற்றை அரசாங்க அலுவலகத்தில் அல்லது அரசுக் குச் சொந்தமான இடத்தில் வைத்திருப் பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது.
இந்தக் கட்டடங்களில் இவை இருக்குமானால், அவற்றை படிப்படியாகவும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமலும், பிறர் கவனத்தை ஈர்க்காத வகை யில் அல்லது எந்தவித அசம்பா விதமும் நிகழாத வகையிலும் அகற்றவேண்டும்.
– சி.ஏ. ராமகிருஷ்ணன் அரசு தலைமைச் செயலாளர்
முதலமைச்சர் அண்ணா அவர் களால் பிறப்பிக்கப் பட்ட உண் மையான மதச் சார்பின்மைக் கொள்கைக்கேற்ற ஆணையிது!
ஆனாலும் இன்றுவரை இது நடைமுறைக்கு வர வில்லை என்பது வருந்தத்தக்கது. இந்த ஆணை இது வரை பின்வாங்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும், பார்ப்பனர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அண்ணா அவர்கள் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை.
அரசமைப்புச் சட்டமே சொன்னாலும் பார்ப்பனி யத்துக்கு விரோ தமான நிலைகள் நிறைவேற்றப்படுவது என்பது இங்கு சுலபமா னதல்ல என்பதுதான் உண்மை.
1947 ஆகஸ்டு 15இல் தந்தை பெரியார் அடித்துச் சொன்னது போல, புள்ளி மான் புலியிடமிருந்து தப்பி சிறுத்தையிடம் சிக்கிக் கொண்டு இருக்கிறது! இதிலிருந்து கிடைக்கும் விடுதலை தான் உண்மையான விடுதலையாக இருக்கமுடியும்.
முற்றும்