பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் அ.முத்தையன் (வயது 93) அவர்கள் இன்று (21.11.2025) அதிகாலை அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை நான்கு மணிக்கு இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது. கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
– கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்)
லால்குடி கழக மாவட்டம் பிச்சாண்டர் கோயில் கழக தோழர் காமராஜ் அவர்களின் வாழ்விணையர் மலர்க்கொடி (வயது 58) நவ.19 ஆம் தேதி காலை 11 மணிக்கு மறைவுற்றார். தகவலறிந்து லால்குடி மாவட்ட கழக சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது

19.11.2025 அன்று மறைந்த மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினர் ‘கழகமுரசு’ இராமசாமி சங்கிலி அவர்களின் இறுதி நிகழ்வு; நேற்று (20.11.2025) மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், கழகத் தலைவர் நாக.பஞ்சுவின் தலைமையில், கழகத்தின் கொள்கைப்பரப்புக்குழுவின் தலைவர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா அவர்கள் இறுதி நிகழ்வை நடத்திட, முனைவர், மன்னர் மன்னன் மருதை அவர்களின் இரங்கலுரையோடும் மறைந்த இராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பை அவரின் மூன்று பெயரப்பிள்ளைகள் படைக்க இறுதி அடக்கம் நடைபெற்றது.
