டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுப்பு, அதிக நெல் கொள்முதல் இழுத்தடிப்பு என ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மேல் பாரபட்சம் காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. அதேநேரம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கருத்து வேறுபாடுகள் இருந்தால் மாநில அரசுடன் பேசித் தீர்க்க வேண்டும். முடிவெடுக்காமல் மசோதாக்களை நீண்ட காலம் நிறுத்தி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 10ஆவது முறையாக பதவியேற்பு பீகார் முதலமைச்சரானார் நிதிஷ்குமார்: 26 அமைச்சர் களும் பதவியேற்றனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளுநர்களின் கருத்து குறித்த உச்ச நீதிமன்றத் தின் கருத்து, தமிழ்நாட்டின் 10 மசோதாக்கள் மீதான இரண்டு நீதிபதிகள் கொண்ட தீர்ப்பை பாதிக்காது – மேனாள் நீதிபதி கே.சந்துரு கருத்து.
தி இந்து:
* மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு குறித்த குடியரசுத் தலைவர் குறிப்புக்கு உச்சநீதிமன்றத்தின் பதில் “வருந்தத்தக்கது மற்றும் அதிர்ச்சியளிப்பதாக” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் எதிர்க்கட்சியின் முழுமையான தோல்வியால் தூண்டப்பட்ட கூச்சல்களுக்கு மத்தியில், காங்கிரஸ் ‘இந்தியா’ கூட்டணிக்கு உறுதியளித்துள்ளதாகவும், தேசியக் கூட்டணியை வலுப்படுத்த முயற்சிகளை இரட்டிப்பாக்குவ தாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.வேணுகோபால் பேட்டி.
தி டெலிகிராப்:
* எஸ்அய்ஆர் குழப்பமானது, உயிர்களுக்கும் ஆபத்து” – டிச.4 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க முடியாது. எஸ்அய்ஆர் பணியை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையருக்கு மம்தா கடிதம்.
* ஏப்ரல் 2025இல் பாகிஸ்தான் மேற்கொண்ட பகல்காம் தற்கொலைத் தாக்குதலை ‘கிளர்ச்சி தாக்குதல்’ என்று அமெரிக்க அறிக்கை குறிப்பிடுகிறது. நான்கு நாள் மோதலில் ‘பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கு மேல் இராணுவ வெற்றி கிடைத்தது’ என்றும் கூறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 60 முறை ‘ஆபரேஷன் சிந்தூரை தடுத்தேன்’ என்று கூறியுள்ளார்; பிரதமர் இது குறித்து முழுமையாக மவுனம் சாதிக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டம்.
– குடந்தை கருணா
