J&K பதிவெண் கொண்ட வாகனத்தில் டில்லிக்கு பயணிப்பதற்கு கூட தற்போது அச்சமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டில்லி கார் குண்டுவெடிப்பிற்கு வெகுசிலரே காரணம், ஆனால் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் அந்த பழியை சுமப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கியதால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
