சென்னை, மே 9 – சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த 2,626 மாணவர்கள் மற்றும் 3,273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாண வியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார்.
இதில் 2,129 மாணவர்கள் (81.07%) மற்றும் 2,995 (91.50%) மாணவியர் என மொத்தம் 5,124 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.86% ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47% ஆகும். வேதியியல் பாடப் பிரிவில் 1, தாவர வியல் பாடப்பிரிவில் 1, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப் பிரிவில் 2, வரலாறு பாடப் பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 2, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப்பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 25, கணினி அறிவியல் பாடப் பிரிவில் 3 மற்றும் கணினி பயன் பாடுகள் பாடப்பிரிவில் 9 என்று மொத்தம் 71 மாணவ, மாணவி யர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 42 மாணவ, மாண வியர் பல்வேறு பாடப்பிரிவில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
52 மாணவ, மாணவியர்கள் 551 முதல் 600 வரையிலான மதிப் பெண்களும், 254 மாணவ, மாணவியர்கள் 501லிருந்து 550 வரையிலான மதிப்பெண்களும், 456 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரையிலான மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண் கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 589 மதிப் பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண் களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், மார்க் கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண் களுக்கு 582 மதிப்பெண்கள் பெற்று அய்ந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேர்ச்சி விகிதத்தின் அடிப் படையில், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத் துடன் முதலிடத்தையும், சுப்பரா யன் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.29 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.44 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.55 சதவீதத்துடன் அய்ந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.