கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.10 இலட்சம்; தமிழர் தலைவர் கி.வீரமணி 93 ஆவது பிறந்தநாள் பரிசாக எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்படும்!

7 Min Read

மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட  கழக கலந்துரையாடல் கூட்டம் 16.11.2025 அன்று மாலை 3 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட  கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி  அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பி னர் கி.முருகேசன், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம் குறித்தும், தந்தை பெரியார் கொள்கையை உலகெங்கும் பரப்பிவரும் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை  எழுச்சியுடன் கொண்டாடுவது, மேலும் அவருக்கு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தாக்களை  வழங்கிட வேண்டும் என்றும் வருகின்ற டிசம்பர் 28 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் வருகை –  கிருட்டினகிரியில் ‘‘இதுதான்
ஆர்.எஸ்.எஸ்  பாஜக ஆட்சி  இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி’’என்ற தலைப்பில் தொடர் பரப்புரை பயணப் பொதுக் கூட்டத்திற்கும் சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கழக இளைஞரணித் தோழர் ச.சென்னகிருட்டினன்  வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை நடத்தி வைக்கவும் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வகையில் எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதை   எடுத்துக்கூறி  சிறப்புரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் “பெரியார் உலகம் நிதி” திரட்டுவது, ‘விடுதலை’ சந்தா திரட்டுவது குறித்தும் மாணவர்களை ஊக்கப்படுத்தியும் கருத்துரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட ப.க. தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், ஊற்றங்கரை ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், கிருட்டினகிரி ஒன்றியச் செயலாளர் கி.வேலன், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, ஆவடி மாவட்ட இளைஞரணி நிர்வாகி  ச.சென்னகிருட்டினன், சென்னை எம். மர்பின், ஆலப்பட்டி சட்டக் கல்லூரி  மாணவர் இர.அஜய்குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி கோ.சரவணன், பையூர் செ.வீரபாண்டி, மா.ரூபிகாசிறீ, பாலகுறி ஜெ.முருகன் உள்பட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

கிருட்டினகிரி மாவட்டம் வருகைத் தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்க நன்கொடை அறிவிப்பு செய்தவர்கள்: பையூர் செ.வீரபாண்டி ரூ 5,000/-, மத்தூர் ச.மணிமொழி ரூ5,000/-, போச்சம்பள்ளி ஆ.நிறைதமிழ் – ஆ. நிறைகதிர்-ரூ5,000/-, அ.நவநீதா ரூ2,000/-, கரடியூர் மா.சிறீதேவிகா ரூ 2,000/-, மா.ரூபிகாசிறீ -ரூ1,000/-, எம்.நத்தாசா- ரூ1,000/- குண்டலப்பட்டி  தி.அ.அனலரசு – தி.அ.அறிவுக்கனல்- ரூ1,000/-, காவேரிப்பட்டணம் காந்திநகர் இரா.இராவன்னியா – ரூ1,000/-, ஊற்றங்கரை செ.செம்மொழி – செ. இசைமொழி –  ரூ1,000/, ஆலப்பட்டி இர.அஜய்குமார் ரூ1,000/, செகதேவி மூ.த.சங்கத் தமிழ் ரூ500/- ஆகியோர் எடைக்கு எடை நாணயம் வழங்க மேற்கண்டவாறு அறிவிப்பு செய்துள்ளனர்.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமனிடம் ‘விடுதலை’ ஆண்டு சந்தா வழங்கியவர்கள்: மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, அண்ணா சரவணன், கி.முருகேசன், மா.சிவசக்தி, பெ.செல்வம் ச.சென்னகிருட்டினன் ஆகியோர் தலா ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கினர். அ.கோ. இராசா அரையாண்டுச் சந்தா வழங்கினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி வருகையின்போது விடுதலை சந்தா வழங்குவதாக அறிவிப்பு செய்தவர்கள்: மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம்-10 சந்தாவும், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் – 5 சந்தாவும், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பையூர் பெ.செல்வேந்திரன் – 2  சந்தாவும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

கிருட்டினகிரி மாவட்டம் 

பெரியார் உலகம் நிதி திரட்ட வசூல் பணிக்குழு:

ஒருங்கிணைப்பு:

ஊமை. ஜெயராமன் மாநில ஒருங்கி ணைப்பாளர்,

அண்ணா சரவணன் மாநில ப.க. துணைப் பொதுச்செயலாளர்

கிருட்டினகிரி – காவேரிப்பட்டணம் ஒன்றி யங்கள் ஒருங்கிணைப்பு:- கோ.திராவிடமணி மாவட்டத் தலைவர்,

ஊற்றங்கரை – மத்தூர் ஒன்றி யங்கள்   ஒருங்கிணைப்பு:- செ.பொன்முடி மாவட்டச் செயலாளர்,

காவேரிப்பட்டணம் ஒன்றியம்: 

தலைவர்: பெ.செல்வம்

செயலாளர்: சி.சீனிவாசன், பொருளாளர் பெ.செல்வேந்திரன், உறுப்பினர்கள்: இல.ஆறு முகம், மு.வேடியப்பன், த. அறிவரசன், பெ.மதிமணியன், பூ. இராசேந்திரபாபு,

கிருட்டினகிரி ஒன்றியம்

தலைவர்: த.மாது, செயலாளர்: அ.கோ.இராசா, பொருளாளர்: ச.கிருட்டினன் உறுப்பினர்கள்: கோ.தங்கராசன், கா.மாணிக்கம், கி.வேலன்,

மத்தூர் ஒன்றியம்

தலைவர்: சா.தனஞ்செயன், செயலாளர். கி.முருகேசன், பொருளாளர் க.வெங்கடேசன், உறுப்பினர்கள்: வி.திருமாறன், சி.வெங்கடாசலம், நா. சிலம்பரசன்

ஊற்றங்கரை ஒன்றியம்

தலைவர்: அண்ணா அப்பாசாமி, செய லாளர்: செ.சிவராஜ், பொருளாளர்: பழ.பிரபு, உறுப்பினர்கள்: இராம.சகாதேவன், சீனிமுத்து. இராஜேஷ், காரப்பட்டு ப.இரமேசு, கோ.சரவணன்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன்  தலை மையில் ஆஸ்திரேலிய மெல்போர்னில் நடைபெற்ற “நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டிற்கு” சென்று வந்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெ யராமன்- மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகி யோர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றிவரும் கிருட்டினகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த கழகத் தோழர் ச.சென்னகிருட்டினனுக்குமாவட்ட கழகம் சார்பில் சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அவர் நன்றியை தெரிவித்து கொண்டு வருகின்ற டிசம்பர் 28-அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில்  சிங்காரப்பேட்டையில் நடைபெறும் தனது வாழ்க்கை இணையேற்பு நிகழ்வில் அனைவரும் வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சென்னை மண்டல மேனாள் தலைவர் தாம்பரம் இரத்தினசாமி மறைவிற்கும், பெரியார் நூலகர் வாசகர் வட்டமேனாள் தலைவர் மயிலை நா.கிருட்டினன் மறைவிற்கும் இக்கூட்டம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கிருட்டினகிரி நகரில் வருகின்ற டிசம்பர் 28 – அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும்

இது தான் “ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆட்சி–

இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி”

தொடர் பரப்புரை பெரும் பயண பொதுக் கூட்டம் கிருட்டினகிரியில் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

கிருட்டினகிரி மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியிலும் கழகத் தோழர்கள் அனைவரும் இணைந்து பணி யாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று  கிருட்டினகிரி மாவட்ட  கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 13 -அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி வருகையின்போது ரூ 7,35,000/- வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது தவணையாக பெரியார் உலகம் பெரும் பணிக்கு  பொதுமக்களிடம் நிதியை  திரட்டி வருகின்ற டிசம்பர் 28/12/2025- அன்று கிருட்டினகிரி நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ பத்து இலட்சம் நிதியை திரட்டி வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக  ஆசான் தந்தை பெரியார் கொள்கையை உலகெங்கும் பரப்பிவரும் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா டிசம்பர் 02  அன்று மாவட்டம் முழுவதும் கொள்கைப் பிரச்சார எழுச்சி விழாவாக  சிறப்பாக கொண்டாடும் வகையில்  கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துஇனிப்புகள் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

கடந்த அக்டோபர் 04 – அன்று செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை   இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில்  குடும்பம் குடும்பமாகபெரும் அளவில் திரளாக கலந்துக்கொண்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக அனைத்துத் தோழர்க ளுக்கும் மாவட்ட  கழகம் சார்பில்  நன்றியை தெரிவித்து கொள்கிறது.

டிசம்பர் 28 – அன்று கிருட்டினகிரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில்  தமிழர் தலைவர் 93  ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சமூகநீதிக் காவலர்  ஆசிரியர் அவர்களுக்கு கிருட்டினகிரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

கிருட்டினகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆவடி மாவட்ட கழக இளைஞரணி நிர்வாகி தோழர் ச.சென்ன கிருட்டினன் அவரது வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைக்க டிசம்பர் 28 – காலை சிங்காரப்பேட்டைக்கு வருகை தரும் தமிழர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில்  மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

கிருட்டினகிரி மாவட்ட  கழக சார்பில் டிசம்பர் 24-தந்தை பெரியார் 53 -ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அனைத்து ஒன்றியங்களிலும் அவரது சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

கிருட்டினகிரி மாவட்ட திராவிட மாணவர் கழக புதிய நிர்வாகிகள்: கீழ்க்கண்டவர்கள் அறிவிக்கப்படுகிறது.

மாவட்டத் தலைவர்: இர.அஜய்குமார்,

மாவட்டச் செயலாளர்: செ.வீரபாண்டி,

மாவட்ட துணைத் தலைவர்

ஆ.ஆர்த்தி,

மாவட்ட மாணவர் கழக துணைச் செய லாளர்கள்:

செ.கலையரசி, மா.சிறீதேவிகா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *