பெரியார் பாலிடெக்னிக்கில் போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய சிறப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

வல்லம், நவ. 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக இயங்கும் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார் பாக போதைப் பொருள் முறைகேடு மற்றும் போதைப் பொருள் அச் சுறுத்தல் ஒழிப்பு (Drug Abuse and Eradication of Drug Menace) என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் 13.11.2025 அன்று காலை 11.30 மணிக்கு பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியில் நடைபெற்றது.

விழிப்புணர்வு கருத்தரங்கில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி தலைமையேற்று உரையாற்றினார்.

தஞ்சாவூர் முது நிலை உரிமையியல் நீதிபதி டி.பாரதி போதைப் பொருள் பயன்பாட்டினால் பாதிக் கப்படும் நபர்களுக்கு சட்டப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். போதைப் பொருள் முறைகேட்டால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சமூக குற்றங்களில் இருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று விளக்கமாக உரை யாற்றினார்.

இக் கருத்தரங்கில் தஞ்சாவூர் சட்ட மற்றும் தற்காப்பு வழக்குரைஞர் (Legal and Defence Counsel Advocate) கே.பாலகிருஷ்ணன்,  தனது உரையில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் இளைஞர்களின் உடல் வலிமையும் மன வலி மையும் குறைந்து தன்னம்பிக்கை இழந்து விடுகின்றார்கள் என்று கூறினார்.

மேலும் அவர் கூறு கையில் இளைஞர்களிடம் மாணவர்கள் அனைவரும்  போதைப் பொருள் என்னும் சமூகத் தீமையை வேரோடு அகற்றுவதோடு மட்டுமல்லாமல் வலிமை யான இளைஞர்களைக் கொண்ட வளமான சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று குறிப் பிட்டார்.

தஞ்சாவூர் சட்ட மற்றும் தற்காப்பு வழக் குரைஞர் ஜி.சூரியா அவர் தம் உரையில் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் முறை கேடு மற்றும் போதைப் பொருள் அச்சுறுத்தல் ஒழிப்பு (Drug Abuse and Eradication of Drug Menace) என்ற தலைப்பில் விழிப் புணர்வை ஏற்படுத்தினார்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் துணை முதல்வர் முனைவர் ஜி.ரோஜா மற்றும் இப்பாலிடெக்னிக் முதன்மையர் ஜி.ராஜாராமன் ஆகி யோர் வாழ்த்துரை வழங் கினார்கள்.

விழாவில் முன்னதாக இக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜி.செங்கொடி வரவேற்புரை வழங்கினார். இக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.மாதவன் கருத்தரங்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆர்.நடராஜன் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *