சென்னை, நவ. 21- தமிழ்நாடு & ஒன்றிய அரசிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, அஞ்சல் துறை ஒரு முக்கியமான வசதியை அறிவித்துள்ளது. இனிமேல் வாழ்நாள் சான்றிதழை பெற வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை அஞ்சல்காரர் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு வந்து, பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் ‘லைஃப் சர்டிபிகேட்’ சமர்ப்பிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி, அனைத்து ஓய்வூதியத்தாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை கட்டாயமாகப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். இதனை நேரடியாகச் செல்பவர்களுக்கு உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, தூரப் பயணம் போன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு, அஞ்சல் துறை இந்த கைப்பேசி சேவையை தீவிரப்படுத்தியுள்ளது. இது முதியவர்களுக்கு பெரும் நிம்மதியாக .அமையும்.
டிஜிட்டல் சான்றிதழ்
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த சேவையில், அஞ்சல்காரர் வீட்டிற்கு வரும்போது ஆதார் எண், கைப்பேசி எண், ஓய் வூதிய கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்வார். விரல் ரேகை சரி பார்க்கப்பட்டவுடன், டிஜிட்டல் சான்றிதழ் சில நிமிடங்களில் உருவாக்கப்பட்டு, உடனடியாகத் துறை சார்ந்த கணினிச் செயலகத்துக்குத் தொடர்பு கொள் ளப்படும்.
சேவைக்கான கட்டணமாக ரூ.70 மட்டும் வசூலிக்கப்படும் என அஞ்சல் துறை உறுதிப் படுத்தியுள்ளது. இது வங்கி அல்லது ஆன்லைன் சேவைகளில் நன்கு அறிந்திராத முதியவர்களுக்கு மிகவும் எளிமையான மற்றும் பாதுகாப்பான வழியாகக் காணப்படுகிறது. அஞ்சல்காரர்கள் இதற்கான தனி பயிற்சியும் பெற்றுள்ளனர்.
வாழ்நாள் சான்றிதழ்
ஓய்வூதியம் பெறும் செயல் முறையில் தாமதம் ஏற்படாமல் இருக்க, ஓய்வூதியதாரர்கள் இந்த சேவையை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும் என் றும், நேரம் தாழ்த்தாமல் தங்க ளது அருகிலுள்ள அஞ்சல் நிலை யத்தைத் தொடர்பு கொள் ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உடல்நலம் தளர்ந்த முதியவர்களுக்கு இது மிக அவசியமான சேவையாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், சமீபத்தில் அறி முக மான Advanced Digital Technology முறைகள் மூலமாக, ஓய்வூதியர்களின் தகவல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் ஒரு முறை சமர்ப்பிக்கப்பட்டால், அது தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்பதால், பயனாளர்கள் கிடைக்கும் சலுகைகளில் எந்தத் தடையும் ஏற்படாது.
தமிழ்நாடு அஞ்சல் துறை இந்த வசதியை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் இந்த சேவையை முழுமையாக செயல் படுத்தும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
