புதுடில்லி, மே 9 – வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே உள்ள தமிழர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின தகுதி தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
மாநிலத்தில் பெரும்பான்மை யாக உள்ள மைத்தேயி இன மக்க ளுக்குப் பழங்குடியின தகுதி அளிக் கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மற்ற பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 3.5.2023 அன்று அனைத்து பழங்குடியினர் மாணவர் அமைப்பினர் மைத்தேயி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது எதிர் பாராத விதமாகப் பிரச்சினை ஏற்படவே அந்த அமைதி ஊர்வ லத்தில் வன்முறை வெடித்தது. அங்குள்ள கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத் தப்பட்டன.
அமைதி ஊர்வலத்தில் தொடங் கிய வன்முறை பல்வேறு இடங்க ளுக்கும் வேகமாகப் பரவியது. இதைய டுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, ஊரடங் கும் பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் தமிழர்களும் கணிச மாக இருக்கும் நிலையில், அவர்க ளும் அங்கே சிக்கியுள்ளனர். வன்முறை தொடர்வதால் எப்படி யாவது அங்கிருந்து வெளியேறி தமிழ்நாட்டிற்கு வந்து விட வேண் டும் என்று அவர்கள் விரும்பு கிறார்கள்.
தமிழர்கள் 150 பேர் சிக்கியுள்ளனர்
இருப்பினும், அமைதி இன்னும் திரும்பாததால் பதற்றம் தொடர்ந்தே வருகிறது. இதனிடையே அங்கே சுமார் 150 தமிழர்கள் சிக்கியுள்ள தாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளது. அவர்களில் பலர் மருத்து வர்கள் என்பதும் தெரிய வந்துள் ளது. அங்குச் சிக்கியுள்ள தமிழர்க ளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப் பதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு அவர்களை அணுகியுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறு கையில், “அங்குச் சிக்கியுள்ளவர் களில் சுமார் 42 பேர் மருத்துவர்கள். இது தவிர மாணவர்கள் மற்றும் வேலைக்காக அங்கு சென்றவர்கள் என மொத்தம் 150 பேர் வரை அங்கு இருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன்புரி ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், “நாங்கள் நிலைமையை உன்னிப் பாகக் கண்காணித்து வருகிறோம். மணிப்பூரில் உள்ள தமிழ்ச் சங்கம் எச்சரிக்கையாக உள்ளது. மருத்து வர்கள் சிலர் குடிநீர் பற்றாக் குறையை எதிர்கொண்டனர். இது அங் குள்ள தமிழ்ச் சங்கத்தின் உதவியு டன் உடனடியாக சரி செய்யப் பட்டது” என்றார்.
மியான்மருக்கு அருகில் உள்ள எல்லை நகரமான மோரேயில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கே வன்முறை தொடரும் நிலையில், அனைவருக்கும் சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுடன் தொடர்பில் இருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூரில் ராணுவம் குவிக்கப் பட்டுள்ள போதிலும், வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்தே வருவதால் பதற்றமான சூழல் அங்கு ஏற்பட் டுள்ளது. இதனால் தமிழர்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கே வேலை செய்யும் தமிழர்க ளின் உறவினர்கள் அவர்கள் பாது காப்புடன் இருக்க வேண்டும் என்றே தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மணிப்பூரில் என் சகோதரி இருக்கிறார். அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டின் உரிமையாளர் அவரது பாதுகாப்பிற்கு உத்தர வாதம் அளிக்கவில்லை என்பதால் அவர் தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் தங்கி இருக் கிறார்.
அங்கே கலவரம் ஆரம்பிக்கும் முன்பு அனைத்தும் நன்றாகத் தான் இருந்தது. கலவரம் ஆரம் பித்த உடன் நிலைமை தலைகீழா னது. சாலைகளில் இருந்த அனைத்து வாகனங்களும் தீயிட் டுக் கொளுத்தப்பட்டது. இதனால் தான் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது” என்றார்.
அங்கே பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமூக மக்க ளுக்குப் பழங்குடியின தகுதி வழங்க உள்ளதா கத் தகவல் வெளியான நிலையில், அதற்கு 40% மக்கள் தொகை கொண்ட நாகர்கள் மற்றும் குக்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரண மாகவே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவம் களமிறக்கப்பட்ட போதி லும், அங்கே அமைதி இன்னும் திரும்பவில்லை.
இதற்கிடையே தெலங்கானா அரசு அங்குச் சிக்கியுள்ளவர்களை மீட்க விமானம் அனுப்பியுள்ள நிலையில், அதேபோல தமிழ்நாடு அரசு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.